தமிழர் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் இ.சுந்தரமூர்த்தி: நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் புகழாரம்

படம்: எஸ்.சத்தியசீலன்

படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
2 min read

சென்னை: தமிழ் மொழி மற்​றும் தமிழர்​களின் முன்​னேற்​றத்​துக்கு பாடு​பட்​ட​வர் பேராசிரியர் இ.சுந்​தரமூர்த்தி என்​று, சென்​னை​யில் நடை​பெற்ற நினை​வேந்​தல் நிகழ்ச்​சி​யில், விஐடி பல்​கலைக்​கழக வேந்​தர் கோ.​விசுவ​நாதன் புகழாரம் சூட்​டி​னார்.

தஞ்சை தமிழ்ப் பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் பேராசிரியர் இ.சுந்​தரமூர்த்​தி, சென்​னை​யில் கடந்த மே 13-ம் தேதி கால​மா​னார். இந்​நிலை​யில், தமிழியக்​கம், டாக்​டர் உ.வே.​சா. நூல் நிலை​யம், சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில், அவருக்கு நினை​வேந்​தல் நெகிழ்வு நிகழ்ச்​சி, சென்னை கோட்​டூர்​புரம், தமிழ் இணை​யக்​கல்விக் கழக கலை​யரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இதில், தமிழியக்​கம் நிறு​வனத் தலை​வரும், வேலூர் விஐடி பல்​கலைக்​கழகத்​தின் வேந்​தரு​மான கோ.​விசுவ​நாதன் தலைமை தாங்கி பேசி​ய​தாவது: பேராசிரியர் இ.சுந்​தரமூர்த்​தி​யுடன் நெருங்கி பழகிய​வன் நான். இனிமை​யான மனிதர். யாரை​யும் குறை சொல்​ல​மாட்​டார். கடிந்து பேச​மாட்​டார். 32 ஆண்டு காலம் பேராசிரிய​ராக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர்.

ஆனால், தமிழ் பணி​யில் இருந்து அவர் ஓய்வு பெற​வில்​லை. அவருடைய இழப்பு தமிழ் உலகுக்கு பேரிழப்​பு. 70-க்​கும் மேற்​பட்ட புத்​தகங்​களை​யும், எண்​ணற்ற கட்​டுரைகளை​யும் எழு​தி​யுள்​ளார். தமிழ் உயர வேண்​டும், தமிழர்களும் உயர வேண்​டும் என்று விரும்​பிய​வர்.

தனக்​கும், தனது குடும்​பத்​துக்​கும் எந்த சொத்​தும் சேர்த்து வைக்​காதவர். குடும்​பத்​துக்கு கல்​வியை மட்​டும் தான் சேர்த்து வைத்​தார். ஓலைச் சுவடிகளை புத்​தக​மாக மாற்ற பல முயற்​சிகளை எடுத்​தார். வெளி​நாட்டு மாணவர்​களுக்கு தமிழ் கற்று கொடுத்​தார். வெளி​நாடு​களுக்​குச் சென்று அங்​கும் தமிழை பரப்​பி​னார். அவரைப் போன்​றவர்​கள் இன்​றைய தினம் தேவை.

இன்று எல்​லோரும் தங்​கள் தாய்​மொழி வளர வேண்​டும் என்று விரும்​பு​கிறார்​கள். தாய்​மொழி மீது பற்​றும், அக்​கறை​யும் வைப்​பது தவறு அல்ல. ஆனால், மொழியை மற்​றவர்​கள் மீது திணிக்​கக் கூடாது. அவ்​வாறு செய்​யும் போது​தான் பிரச்​சினை ஏற்​படு​கிறது. பேராசிரியர் சுந்​தரமூர்த்தி தமிழ் மீது பற்று கொண்​ட​வர்​தான்.

ஆனால், அவர் மற்​றவர்​களை கட்​டாயப்​படுத்​த​வில்​லை. இன்று மத்​திய அரசு மும்​மொழிக் கொள்​கையை கட்​டாயப்​படுத்​துகிறது. ஆனால், நமது மொழிக் கொள்கை இரு​மொழிக் கொள்​கை​தான். பேராசிரியர் சுந்​தரமூர்த்தி தமிழ் மொழி​யும், தமிழர்​களும் முன்​னேற வேண்​டும் என்று பாடு​பட்​டார்.

தமிழர்​கள் பொருளா​தா​ரத்​தி​லும் முன்​னேற வேண்​டும் என்று விரும்​பி​னார். அவரது விருப்​பங்​களை நிறைவேற்ற தமிழியக்​கம் தொடர்ந்து பாடு​படும். இவ்​வாறு விசுவ​நாதன் பேசி​னார். சேக்​கிழார் ஆராய்ச்சி மையத்​தின் தலை​வர் நீதிபதி எஸ்​.ஜெகதீசன் புகழஞ்​சலி பேருரை ஆற்றி பேசும்​போது, ``தமிழின் போ​ராளி​யாக இ.சுந்​தரமூர்த்தி திகழ்ந்​தார்.

தன்​னுடைய பதவி​களை தமிழ் மொழிக்​கும், தமிழர்​களுக்​கும் சேவை செய்ய பயன்​படுத்​தி​னார்” என்று குறிப்​பிட்​டார். உலக திருக்​குறள் இணை​யக் கல்விக்​கழக இயக்​குநர் மறைமலை இலக்​கு​வ​னார், தமிழியக்​கம் பொதுச்​செய​லா​ளர் அப்​துல் காதர், துணை தலை​வர் ஜெ.மோகன், பொருளாளர் வே.​பது​ம​னார், மாநிலச் செய​லா​ளர் மு.சுகு​மார், மேலாண்​மைக் குழு உறுப்​பினர் மணிமேகலை கண்​ணன், அனைத்​துலக தமிழ்க் கல்வி பண்​பாட்டு அறி​வியல் மேம்​பாட்டு இணைய ஒருங்​கிணைப்​பாளர் ஒப்​பிலா மதி​வாணன், டாக்​டர் உ.வே.சா நூல் நிலைய செய​லா​ளர் தி.சத்​தி​யமூர்த்​தி, ஆட்​சிக் குழு உறுப்​பினர் ராம.குரு​நாதன் ஆகியோ​ரும் சுந்​தரமூர்த்​தி​யின் நினை​வு​களை பகிர்ந்​துக் கொண்​டனர்.

நிறை​வாக, சுந்​தரமூர்த்​தி​யின் மூத்த மகன் சு.எழில் நம்பி நெகிழ்​வுரை நிகழ்த்​தி​னார். சுந்​தரமூர்த்​தி​யின் மனைவி இ.வசந்​தி, சென்னை பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் எஸ்​.பி.​தி​யாக​ராஜன்​ மற்​றும்​ தமிழ்ப் பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

<div class="paragraphs"><p>படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
சென்னை ஆலையில் நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட ‘மினி கன்ட்ரிமேன் சி’ எஸ்யூவி அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in