இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு ‘விக்சித் பாரத் சிற்பி’ விருது

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு ‘விக்​சித் பாரத் சிற்பி’ விருதை வழங்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு ‘விக்​சித் பாரத் சிற்பி’ விருதை வழங்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

Updated on: 
1 min read

சென்னை: மும்​பையில் அக்​டோபர் 23-ம் தேதி, நடை​பெற்ற நிகழ்​வில், இஸ்ரோ தலை​வரும், விண்வெளித் துறை​யின் செயலரு​மான டாக்​டர் வி. நாராயணனுக்கு, மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி ‘விக்​சித் பாரத் சிற்பி’ (Architect of Viksit Bharat Award) என்ற விருது வழங்​கப்​பட்​டது.

இந்த விருது, இந்​தி​யாவின் விண்​வெளித் திட்​டத்​திற்கு டாக்​டர் நாராயணன் அவர்​கள் ஆற்​றிய மதிப்​புமிக்க பங்​களிப்​பு​களை​யும், நாட்​டின் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பத் திறன்​களை மேம்​படுத்​து​வதில் அவர் ஆற்​றிய பங்​கையும் அங்​கீகரிக்​கிறது.

இந்​த கவுரவம், இந்​தி​யாவின் வளர்ச்​சிக்​கும், ‘விக்​சித் பாரத்’ எனும் வளர்ச்​சி​யடைந்த இந்​தியா என்ற தொலைநோக்​குப் பார்​வையை நனவாக்​கு​வதற்​கும் இஸ்ரோ ஆற்​றிவரும் குறிப்​பிடத்​தக்க பங்​களிப்​பு​களைப் பிரதிபலிக்​கிறது.

<div class="paragraphs"><p>இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு ‘விக்​சித் பாரத் சிற்பி’ விருதை வழங்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.</p><p></p></div>
மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் கலந்துரையாடல்: 3,000 பேருக்கு விருந்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in