நமுத்து போன விஜய்யின் ‘பொலிட்டிக்கல் பாம்’

நமுத்து போன விஜய்யின் ‘பொலிட்டிக்கல் பாம்’
Updated on
1 min read

தவெக​வுடன் கூட்​ட​ணிக்கு வரும் கட்​சிகளுக்கு ஆட்சி அதி​காரத்​தில் பங்கு வழங்​கப்​படும் என அக்​கட்சி தலை​வர் விஜய் வீசிய ‘பொலிட்​டிக்​கல் பாம்’ நமுத்து போய்​விட்​ட​தாக விமர்​சனங்​கள் கிளம்​பி​யிருக்​கின்​றன.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் முதல் மாநில மாநாடு அக்​டோபர் 27, 2024 அன்று விக்​கிர​வாண்​டி​யில் நடை​பெற்​றது. அதில் விஜய், கொள்கை எதிரி மற்​றும் அரசி​யல் எதிரி யார் என்​பதை குறிப்​பிட்​டார். அப்​போது, “தவெக​வுடன் கூட்​ட​ணிக்கு வரும் கட்​சிகளுக்கு ஆட்சி அதி​காரத்​தில் பங்கு வழங்​கப்​படும்” என்று அறி​வித்​தார். தமிழக அரசி​யலில் இது ஒரு புதிய முன்​னெடுப்​பாகப் பார்க்​கப்​பட்​டது. தவெக-​வினர் அதை ‘பொலிட்​டிக்​கல் பாம் ’ என்​றெல்​லாம் கொண்​டாடினர்.

ஏனெனில் பொது​வாகப் பெரிய கட்​சிகள் கூட்​ட​ணியை ஏற்​றுக் கொண்​டாலும், ஆட்​சி​யில் பங்கு தர முன்​வ​ரு​வ​தில்​லை. ஆனால், விஜய் வீசிய அந்த பாம் தற்​போது நமுத்து போய் விட்​ட​தாக விமர்​சனம் கிளம்​பி​யிருக்​கிறது.இதுகுறித்து நம்​மிடம் அரசி​யல் நோக்​கர்​கள் கூறுகை​யில், “தி​முக மற்​றும் தேஜ கூட்​ட​ணி​யில் இருக்​கும் கட்​சிகளைத் தன் பக்​கம் ஈர்க்க விஜய் ஒரு மெகா பிளானையே கையில் எடுத்​தார். அதன் ஒரு பகு​தி​யாகவே, ஆட்சி அதி​காரத்​தில் பங்கு என்ற அதிரடி அறி​விப்பை வெளி​யிட்​டார்.

அதி​காரப் பகிர்வு ஆசை காட்​டி, பல முக்​கியக் கட்​சிகளைத் தன் பக்​கம் இழுக்​கலாம் என அவர் கணக்கு போட்​டிருந்​தார். ஆனால், ஒரு தேர்​தலில் கூட களம் காணாத விஜய்​யின் வாக்கு வங்கி எந்​தள​விற்கு இருக்​கும் என்​பது புதி​ராகவே இருப்​ப​தால், எந்​தக் கட்​சி​யும் பனையூர் பக்​கம் எட்​டிக் கூடப் பார்க்​க​வில்​லை.

ஆரம்​பத்​தில் இருந்தே காங்​கிரஸ் கூட்​ட​ணிக்கு வரும் என தவெக பெரிதும் நம்​பியது. துணை முதல்​வர் பதவி, 70 சீட் என ஆப்​பர்​களை அள்ளி வீசி​னார்​கள் பனையூர் வாசிகள்.

ஆனால் டெல்லி அரசி​யலை கருத்​தில் கொண்டு திமுக-வுடனேயே தொடரலாம் என காங்​கிரஸ் மேலிடம் முடிவு செய்து கூட்​ட​ணியை உறு​திப்​படுத்​தி​யது. புதிய கட்​சியை தொடங்​கி​யிருக்​கும் பண்​ருட்​டி​யார் மட்​டுமே தவெக-வுக்கு ஆதரவு தெரி​வித்​திருக்​கி​றார். இதனால் விஜய்​யின் பொலிட்​டிகள் பாம் நமத்து போய்​விட்​டது என்​று​தான் சொல்ல வேண்​டும்” என்​ற​னர்.

இதுகுறித்து பேசும் தவெக நிர்​வாகி​கள், “அதி​காரத்​தில் பங்கு என்று சொன்​னது கூட்​ட​ணிக்​காக அல்ல, அது மக்​களின் அதி​காரத்தை மக்​களிடமே ஒப்​படைப்​ப​தற்​கான ஜனநாயகப் பண்​பு. மற்ற கட்​சிகள் வரா​விட்​டாலும், தமிழக மக்​கள் எங்​கள் பக்​கம் இருக்​கி​றார்​கள். 234 தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர் தேர்வு செய்​யும் வேலை​கள் நடக்​கின்​றன. நாங்​கள்​தான் வெற்​றி​பெற்று ஆட்​சியை பிடிப்​போம்” என்​றனர்.

நமுத்து போன விஜய்யின் ‘பொலிட்டிக்கல் பாம்’
யார் இந்த கிறிஸ்டோபர் திலக்? - சீனியர்களை பின்னுக்கு தள்ளி ராஜ்யசபாவுக்கு தேர்வான பின்னணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in