விஜய் அலை எடுபடாத நாகை மாவட்டம்

திமுக கூட்டணி 2, அதிமுக ஒரு தொகுதியில் வெற்றி
ஜவாஹிருல்லா, லதா, ஓ. எஸ்.மணியன்

ஜவாஹிருல்லா, லதா, ஓ. எஸ்.மணியன்

Updated on
1 min read

நாகப்பட்டினம்: தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய்யின் அலை சுற்றிச் சுழன்று அடித்துள்ள நிலையில், நாகையில் அது எடுபடவில்லை. விஜய் அலையை வீழ்த்தி திமுக கூட்டணி 2 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி ஒரு தொகுதியையும் தக்க வைத்துள்ளன.

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் 2021 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விசிக போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அதன் தலைவர் ஜவாஹிருல்லா வேட்பாளராக போட்டியிட்டார்.

இதில், அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரைவிட 9,781 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மமக வேட்பாளர் ஜவாஹிருல்லா 56,305 வாக்குகளும், தவெக வேட்பாளர் சுகுமாரன் 46,524 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்க.கதிரவன் 41,586 வாக்குகளும், நாதக வேட்பாளர் பாத்திமா பர்ஹானா 5,348 வாக்குகளும் பெற்றனர்.

நோட்டாவுக்கு 479 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் தொகுதியை திமுக கூட்டணி தக்கவைத்துள்ளது. கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இந்த தேர்தலிலும் அக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக லதா நின்றார். அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரைவிட 2,131 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லதா 55,668 வாக்குகளும், தவெக வேட்பாளர் செந்தில் பாண்டியன் 53,537 வாக்குகளும், பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் 31,561 வாக்குகளும், நாதக வேட்பாளர் கார்த்திகா 8,040 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 483 வாக்குகள் கிடைத்தன.

இதன் மூலம் தொகுதியை திமுக கூட்டணி தக்கவைத்துள்ளது. வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஓ.எஸ்.மணியன் மீண்டும் போட்டியிட்டார்.

அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியைவிட 7,331 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 59,172 வாக்குகளும்.

திமுக வேட்பாளர் மா.மீ.புகழேந்தி 51,841 வாக்குகளும், தவெக வேட்பாளர் கிங்ஸ்லி ஜெரால்ட் 38,347 வாக்குகளும், நாதக வேட்பாளர் இடும்பாவனம் கார்த்தி 10,396 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 548 வாக்குகள் கிடைத்தன.

இதன் மூலம் தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொண்டது. நாகை மற்றும் கீழ்வேளூரில் தவெக இரண்டாம் இடமும், வேதாரண்யத்தில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

<div class="paragraphs"><p>ஜவாஹிருல்லா, லதா, ஓ. எஸ்.மணியன்</p></div>
முதல்வர் ஆகிறார் விஜய்... தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in