‘நம் ஒரே குறிக்கோள்...’ - தவெகவை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு விஜய் நன்றி

ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவித்து ட்வீட்
‘நம் ஒரே குறிக்கோள்...’ -  தவெகவை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு  விஜய் நன்றி
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நம் மக்களின் நல்வாழ்வே நம் ஒரே குறிக்கோளாக உள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநிலத்தின் முன்னேற்றத்திலும், மக்களின் நலனிலும் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம். இந்த முயற்சியில் மத்திய அரசின் ஆதரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து விஜய் வெளியிட்ட பதிவில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான தாங்கள் தொலைபேசி மூலம் அழைத்தற்கும், நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததற்கும் மனமார்ந்த நன்றி.

பொதுச் சேவையில் சிறந்து விளங்குவதிலும், தேவைப்படும்போது மாநிலத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் நாங்கள் உறுதியுடன் இருப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு எனது நன்றி. மக்கள் பிரச்சினைகளைக் களைவதிலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.

தேர்தலில் தவெக வெளிப்படுத்திய சிறப்பான செயல்பாட்டுக்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் மாநில மக்களின் நல்வாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது அனைத்து முயற்சிகளையும் முழுமையாகச் செயல்படுத்தும்” என தெரிவித்திருந்தார்.

இதேபோல், ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “விஜய் அவர்களைத் தொடர்பு கொண்டு, தவெக பெற்ற சிறப்பான வெற்றிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இளைஞர்களின் குரல் புறக்கணிக்க முடியாதது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் அளித்த பங்களிப்புக்கு எனது உளமார்ந்த நன்றி. தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கவும் அவர்களுக்குச் சேவையாற்றவும் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் செயல்படும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நம் ஒரே குறிக்கோள்...’ -  தவெகவை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு  விஜய் நன்றி
“மம்தா பானர்ஜி தோல்வியை ஏற்க வேண்டும்” - மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in