விஜய் வேட்புமனுவில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்

ரூ.6 கோடி பிரச்சார வாகன விவரமும் சேர்ப்பு
விஜய் வேட்புமனுவில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்
Updated on
1 min read

திருச்சி: தவெக தலை​வர் விஜய் பெரம்​பூரில் தாக்​கல் செய்த வேட்​புமனு​வில் திருத்​தம் மற்​றும் கூடு​தல் விவரம் சேர்க்க 3 பிர​மாணப் பத்​திரங்​களை​யும், திருச்சி கிழக்கு வேட்​புமனு​வில் ரூ.6 கோடி பிரச்​சார வாக​னம் தொடர்​பாக கூடு​தல் விவரம் சேர்க்க ஒரு பிரமாணப் பத்திரத்தையும் வழக்கறிஞர்கள் தாக்​கல் செய்தனர்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பெரம்​பூர், திருச்சி கிழக்கு தொகு​தி​களில் தவெக தலை​வர் விஜய் போட்​டியிட வேட்​புமனு தாக்​கல் செய்​துள்​ளார். இதில், வயது மற்றும் வழக்​குகள் குறித்து திருத்தம் செய்ய வேண்டியிருந்தது.

மேலும், அவர் 2 தொகு​தி​களி​லும் அளித்த பிரமாணப் பத்​திரத்​தில், சொத்து விவரப் பகு​தி​யில் தற்​போது அவர் பயன்படுத்தி வரும் ரூ.6 கோடி மதிப்​பு பிரச்​சார வாக​னம் குறித்து குறிப்​பிட​வில்​லை.

இதையடுத்​து, தவெக வழக்​கறிஞர்​கள் பிரி​வினர் நேற்று முன்​தினம் பெரம்​பூர் தொகு​தி​யில் 2 வழக்​கு​கள் உள்ள விவரம், வயது திருத்​தம் தொடர்​பாக​வும் பிழைத் திருத்​தல் பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்​தனர்.

மேலும் இரு தொகு​தி​களி​லும் பிரச்​சார வாக​னத்தை சொத்​து​விவரத்​தில் கூடு​தலாக சேர்க்​கக்கோரி கூடு​தல் பிர​மாணப் பத்​திரமும் தாக்​கல் செய்​தனர். இதுகுறித்து தவெக​வினர் கூறிய​தாவது: பொது​வாக விண்​ணப்​பங்​களில் பூர்த்​தி​யடைந்த வயதை தான் குறிப்​பிட வேண்​டும். ஆனால், பெரம்​பூரில் நடப்பு வயதை குறிப்​பிட்​டுள்​ளனர்.

திருச்சி கிழக்​கில் சரி​யாக பூர்த்​தி​யடைந்த வயது குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. மேலும், பிரச்​சார வாக​னம் சேர்க்​காத விவர​மும் திருச்சி கிழக்​கில் மனு தாக்​கல் செய்த பிறகே தெரிய​வந்​தது.

இதையடுத்​து, பெரம்​பூரில் வயது திருத்​தம், வழக்​கு​கள் உள்ள விவரம் தொடர்​பாக 2 பிழைத் திருத்​தல் பிர​மாணப் பத்​திரம் மற்​றும் பிரச்​சார வாக​னம் தொடர்​பாக கூடு​தல் பிர​மாணப் பத்​திரம் என 3 பிர​மாணப் பத்​திரங்​களும், திருச்சி கிழக்​கில் பிரச்​சார வாக​னத்தை சொத்து விவரத்​தில் சேர்க்​கக் கோரி கூடு​தலாக ஒரு பிர​மாணப் பத்​திர​மும் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

வேட்​புமனு தாக்​கல் செய்​யும்நாள் இன்​றுடன் (ஏப்​.6) முடிவடைவ​தால், அது​வரை திருத்​தங்​கள் செய்​யலாம். இதனால், வேட்​பு மனுவுக்கு எந்த பிரச்​சினையும் வராது.

அதே​போல, வேட்​பு மனுபரிசீலனை​யின்​போது ஏதேனும் சந்​தேகம் இருந்​தால், அது தொடர்​பாக தேர்​தல் அலு​வலர்​களிடம் விளக்​கம் தந்​தால் போதுமானது. இவ்​வாறு கூறினர்.

இதுகுறித்து திருச்சி கிழக்கு தேர்​தல் அலு​வலர் முத்து முரு​கேச​பாண்​டியனிடம் கேட்​டபோது, “பிரச்​சார வாக​னம் தொடர்பாக கூடு​தல் பிர​மாணப் பத்​திரம் அளிக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

விஜய் வேட்புமனுவில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்
தமிழகத்தில் 3 மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in