இனி வீடியோ மூலம் பிரச்சாரம்: விஜய் திடீர் முடிவு

இனி வீடியோ மூலம் பிரச்சாரம்: விஜய் திடீர் முடிவு
Updated on
1 min read

கொளத்தூர் பரப்புரையில் ஏற்பட்ட அனுபவங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சார வியூகத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தவெக வட்டாரங்கள் கூறியதாவது: விஜய் நேற்று முன்தினம் பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பெரம்பூர், கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொளத்தூர் தொகுதியில் அவர் பிரச்சாரத்தைத் தொடங்கியபோதே கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் அப்பகுதியே ஸ்தம்பித்தது.

கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஊர்ந்து சென்றதால், அவரால் பிரச்சாரத்தை தொடர முடியவில்லை. பாதியிலேயே பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார். காவல்துறை தரப்பில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இதற்குக் காரணம்.

இனி வரும் நாட்களிலும் இது போன்ற சிக்கல்கள் வரலாம் என்பதால் இனிமேல், ‘வீடியோ வடிவிலான’ பிரச்சாரத்தை முன்னெடுக்க விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர் குறித்தும், அங்கு நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் விஜய் பேசிப் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளன.

இதை அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பெரிய திரைகளில் ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமான தொகுதிகளுக்கு மட்டுமே நேரில் செல்லத் திட்டமிடும் விஜய், மற்ற இடங்களுக்கு வீடியோ பிரச்சாரமே போதும் என நினைக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இனி வீடியோ மூலம் பிரச்சாரம்: விஜய் திடீர் முடிவு
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை வேட்புமனு தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in