திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை வேட்புமனு தாக்கல்

ஓர் இடத்தில் மட்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை வேட்புமனு தாக்கல்
Updated on
1 min read

திருச்சி: ​திருச்சி கிழக்கு தொகு​தி​யில் தவெக தலை​வர் விஜய் நாளை (ஏப்​.2) வேட்​புமனு தாக்கல் செய்​கிறார். இதற்கான ஏற்பாடுகளை தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்து வருகிறார்.

சட்​டப்​பேரவைத் தேர்​தலில் சென்னை பெரம்​பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கு தொகு​தி​யிலும் தவெக தலை​வர் விஜய் போட்​டி​யிடு​கிறார். ஏற்​கெனவே பெரம்​பூரில் விஜய் வேட்​புமனு தாக்​கல் செய்​துள்ள நிலை​யில், திருச்சி கிழக்கு தொகு​தி​யி்ல் வேட்​புமனு தாக்​கல் செய்வதற்காக நாளை (ஏப்​.2) திருச்சி வரு​கிறார்.

அவரது வரு​கை​யையொட்டி உரிய பாது​காப்பு ஏற்​பாடு​களை மேற்​கொள்​ள​வும், பிரச்​சா​ரத்​துக்கு அனு​மதி கேட்​டும் தவெக நிர்​வாகி செங்​கோட்​டையன் நேற்று திருச்சி மாநகர காவல்​துறை ஆணை​யர் காமினியை சந்​தித்து மனு அளித்​தார்.

தொடர்ந்து திருச்​சி​யில் முகாமிட்​டுள்ள செங்​கோட்​டையன், விஜ​ய்யின் பயணத் திட்​டம் குறித்து நிர்​வாகி​களிடம் ஆலோ​சித்து வரு​கிறார்.

இதுகுறித்து தவெக மாநில நிர்​வாகி ஒரு​வர் கூறிய​தாவது: நாளை நண்​பகல் 12 மணி​யள​வில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலை​யத்​துக்குவருகை தரும் விஜய், 12.30 மணிக்கு திருச்சி பாலக்​கரை கால்​நடை மருத்​து​வ​மனை அருகே உள்ள மாநக​ராட்சி 2-வது மண்டல அலு​வல​கத்​தில் மாநக​ராட்சி உதவி ஆணை​யரும், தேர்​தல் நடத்​தும் அலு​வலரு​மான முத்து முரு​கேச​பாண்​டி​யிடம் தனது வேட்​புமனுவை தாக்​கல் செய்​கிறார்.

அங்​கிருந்து ஊர்​வல​மாக வந்து மரக்​கடை எம்​ஜிஆர் சிலை முன்பு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படு​கிறார். தொடர்ந்து இ.பி.ரோடு, அரியமங்​கலம் பால்​பண்​ணை, கே.கே.நகர் பேருந்து நிலை​யம் உள்​ளிட்ட பகு​தி​களில் தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​ய​வும், இப்​பகு​தி​யில் ஊர்​வல​மாகச் சென்று திருச்சி விமான நிலை​யத்​துக்கு செல்​ல​வும் காவல்​துறை​யிடம் அனு​மதி கோரப்​பட்​டுள்​ளது.

இதேபோல் தேர்​தல் ஆணை​யத்​திட​மும் ஆன்​லைன் மூலம் முறைப்​படி விண்​ணப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு தெரி​வித்​தார்.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல்​துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “தேர்​தல் ஆணை​யத்​தின் விதிமுறை​கள்​ படி தவெக தலை​வர் விஜய் வேட்​புமனு தாக்​கல் செய்​வதற்கு எவ்​வித கட்​டுப்​பாடும் இல்​லை.

அவர் மரக்​கடை எம்​ஜிஆர் சிலை பகு​தி​யில் மட்​டும் தேர்​தல் பிரச்​சா​ரம் செய்ய அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. வேறு எங்​கும் பிரச்​சா​ரம் செய்ய அனு​மதி அளிக்கப்படவில்​லை. அதே​போல அவர் ரோடுஷோ செல்​வதற்​கும் அனு​மதி மறுக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை வேட்புமனு தாக்கல்
ஜோதிட நாள்காட்டி 01.04.2026 | பங்குனி 18 - புதன்கிழமை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in