ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம்: விஜய் அறிவிப்பு

ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம்: விஜய் அறிவிப்பு
Updated on
2 min read

ஒவ்​வொரு நெச​வாளர் குடும்​பத்​துக்​கும் ஆண்​டுக்கு ரூ.30 ஆயிரம் வழங்​கப்​படும் என்று தமிழக வெற்​றிக் கழக தலை​வர் விஜய் தெரி​வித்​தார்.

திருப்​பூர் மாவட்​டத்​தில் உள்ள 8 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் போட்​டி​யிடும் தவெக வேட்​பாளர்​களை ஆதரித்து அக்​கட்​சித் தலை​வர் விஜய் பெரு​மாநல்​லூரில் நேற்று பிரச்​சா​ரம் செய்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: தவெக தேர்​தல் வாக்​குறுதி புத்​தக​மாக வரும் 16-ம் தேதி வெளி​யிடப்​பட​வுள்​ளது. அதற்கு முன்​பாக சில முக்​கிய வாக்​குறு​தி​களை மட்​டும் அளிக்​கிறேன். நெச​வாளர்​களின் தயா​ரிப்​பு​களை நேரடி​யாக சர்​வ​தேச சந்​தைகளில் விற்​பனை செய்​யும் வகை​யில் அரசுக்​குச் சொந்​த​மான உலகளா​விய இ-காமர்ஸ் பிராண்ட் உரு​வாக்​கப்​படும். முக்​கிய நகரங்​களில் கைத்​தறி விற்​பனை நிலை​யங்​கள், ஷோரூம்​கள் அமைக்​கப்​படும்.

கைத்​தறி, நிலை​யற்ற நூல்​விலை, மின்​சார நெருக்​கடியைப் பகிர்ந்து கொள்ள கைத்​தறி, விசைத்​தறி வைத்​திருக்​கும் ஒவ்​வொரு நெச​வாளர் குடும்​பத்​துக்​கும் ஆண்​டுக்கு வங்​கி​களின் மூல​மாக ரூ.30 ஆயிரம் வழங்​கப்​படும். கைத்​தறிகளுக்​கான இலவச மின்​சா​ரம் 500 யூனிட், விசைத்​தறிகளுக்​கான இலவச மின்​சா​ரம் 1,500 யூனிட்​டு​களாக உயர்த்​தப்​படும்.

நெச​வாளர்​களுக்கு உற்​பத்தி செல​வைக் குறைக்க அவர்​கள் வாங்​கும் ரசாய​னம், சாயங்​களுக்கு 50 சதவீதம் மானி​யம் வழங்​கப்​படும். அனைத்து நெச​வாளர்​களுக்​கும் ரூ.10 லட்​சம் ஆயுள் காப்​பீடு வழங்​கப்​படும். நெச​வாளர்​களின் முதி​யோர் ஓய்​வூ​தி​யம் மாதம் ரூ.3 ஆயிர​மாக உயர்த்​தப்​படும்.

விரி​வான ஆய்​வுக்​குப் பிறகு மின் கட்​ட​ணம் முறைப்​படுத்​தப்​படும். இந்த நிறு​வனங்​களுக்கு அடுத்த 5 ஆண்டு ஆண்​டுக்​களுக்கு 100 சதவீத மின்​சார வரி விலக்கு அளிக்​கப்​படும். இந்த நிறு​வனங்​களை நவீனப்​படுத்​த​வும், உலக அளவில் போட்​டி​போட​வும் 35 சதவீத நேரடி மூலதன மானி​யம் வழங்​கப்​படும். 5 ஏக்​கருக்கு குறை​வான நிலம் உள்ள விவ​சா​யி​களின் கூட்​டுறவு பயிர் கடன் தள்​ளு​படி செய்​யப்​படும். 5 ஏக்​கருக்கு மேல் உள்ள விவ​சா​யிகளுக்கு 50 சதவீத பயிர்​கடன் தள்​ளு​படி வழங்​கப்​படும். குறைந்​த​பட்ச ஆதரவு விலைக்கு சட்​டப்​பூர்வ உத்​தர​வாதம் அளிக்​கப்​படும்.

நெல் குவிண்​டாலுக்கு ரூ.3,500, கரும்​புக்கு டன் ஒன்​றுக்கு ரூ.4,500 வழங்​கப்​படும். உழவர்​கள் தோழன் திட்​டத்​தின்​படி, விவ​சாய தொழி​லா​ளர்​களுக்கு ஒரு குடும்​பத்​துக்கு ஆண்​டுக்கு ரூ.10 ஆயிரம் நேரடி முதலீட்டு ஆதரவு தொகை​யாக வழங்​கப்​படும். 5 அல்​லது அதற்கு மேற்​பட்​டுள்ள ஆண்​டு​கள் தொடர்ச்​சி​யாக பணி​யில் உள்ள அனைத்து தற்​காலிக ஆசிரியர்​கள், செவிலியர்​கள், எழுத்​தர்​கள் பணி நிரந்​தரம் செய்​யப்​படு​வர். பதவி உயர்​வுக்கு பணம் பெறும் கலாச்​சா​ரம் முடிவுக்கு கொண்​டு​வரப்​படும்.

அனைத்து அரசு ஊழியர்​களின் பணி​யிட​மாற்​றங்​கள் வெளிப்​படை​யான மற்​றும் கால​வரை​முறைக்கு உள்​பட்ட வகை​யில் நடை​முறைப்​படுத்​தப்​படும். காவலர்​களின் அடிப்​படை மாத ஊதி​யம் ரூ.18,200 இல் இருந்து ரூ.25 ஆயிர​மாக உயர்த்​தப்​படும். அதி​க​மான அழுத்​தம் உள்ள பணி​களில் ஈடு​படும் காவலர்​களுக்கு மாதம் ரூ.1,000 வழங்​கப்​படும். காவலர்​களின் பணி நேரங்​கள் முறைப்​படுத்​தப்​படும். அதி​கப்​பணி கொண்ட காவலர்​களுக்கு வாரத்​துக்கு ஒரு முறை​யில் விடு​முறை அளிக்​கப்​படும். பெண் காவலர்​களுக்கு தனி ஓய்​வறை​கள், நடமாடும் கழி​வறை​கள் அமைக்​கப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம்: விஜய் அறிவிப்பு
ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பிரச்சாரம்: கிரிஷ் சோடங்கர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in