“பாலியல் வன்கொடுமை செய்த 2 தவெக நிர்வாகிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” - பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்

“பாலியல் வன்கொடுமை செய்த 2 தவெக நிர்வாகிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” - பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்
Updated on
1 min read

தூத்துக்குடி: வேலை வாங்​கித் தரு​வ​தாக கூறி அழைத்​துச் சென்​று, பாலியல் வன்​கொடுமை செய்த தவெக நிர்​வாகி​கள் 2 பேருக்கு கடுமை​யான தண்​டனை வழங்க வேண்​டும் என பாதிக்​கப்​பட்ட பெண் கூறி​யுள்​ளார்.

தூத்​துக்​குடி மாவட்​டம், ஸ்ரீவைகுண்டம் பகு​தி​யைச் சேர்ந்த பெண்​ணை, வேலை வாங்​கித் தரு​வ​தாக காரில் அழைத்​துச் சென்​று, குளிர்​பானத்​தில் மயக்க மருந்து கலந்து கொடுத்​து, பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக புகார் எழுந்​தது. இதுகுறித்து தூத்​துக்​குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்​பாள​ராக இருந்த ஆறு​முகமங்​கலம் பகு​தி​யைச் சேர்ந்த பாலசுப்​பிரமணி​யன், அவரது நண்​பர் தவெக நிர்​வாகி​யான ராம​நாத​புரம் பகு​தி​யைச் சேர்ந்த ஜெய​பால் ஆகிய 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்​து, பாதிக்​கப்​பட்ட பெண் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 2 ஆண்​டு​களாக, ஸ்ரீவை​குண்​டம் எம்​எல்ஏ அன்னை வி.ஜி.சர​வணனுடன் இணைந்து கட்சி பணி செய்து வரு​கிறேன். கடந்த 7 மாதங்​களுக்கு முன்பு பாலசுப்​பிரமணி​யன் என்​பவர் அறி​முக​மா​னார். அவர் என்​னிடம் வி.ஜி.சர​வணனின் லாட்​டரி தொழில் மூலம் வேலை ஏற்​பாடு செய்து தரு​வ​தாக​வும் அதற்​காக ராம​நாத​புரம் சென்று முகவர் ஒரு​வரை பார்க்க வரும்​படி​யும் மே 3-ம் தேதி அழைத்​துச் சென்​றார்.

வழி​யில் சாயல்​குடி அருகே குளிர்​பானத்​தில் மயக்க மருந்து கலந்து கொடுத்​துள்​ளார். இது தெரி​யாமல் குடித்​த​தில் மயக்க நிலை​யில் இருந்த என்னை ராம​நாத​புரத்​தில் உள்ள ஒரு விடுதி அறை​யில் அடைத்து வைத்து பாலா​வும் மற்​றொரு​வரும் சேர்ந்து என்னை பாலியல் வன்​கொடுமை செய்​தனர்.

இதுகுறித்து கேட்​ட​போது, ‘உன்னை சரவணன்​தான் அழைத்து வரச்​சொன்​னார் அவரிடம் கேட்​டுக்​கொள்’ என்​றனர். பின்​னர் அவரை தொடர்பு கொண்டு பேசும்​போது, இதையெல்​லாம் பெரிதுபடுத்த வேண்​டாம் என்​றார். அதன்​பின்​னர், ‘இதுபற்றி வெளியே கூறி​னால் உனது குழந்​தையை கொலை செய்து விடு​வோம்’ என வன்​கொடுமை செய்த இரு​வரும் மிரட்​டினர்.

இதுபற்றி அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜூ​னா, ஜெகதீஸ்​வரி​யிடம் புகார் தெரி​வித்​தேன். தவெக ஆட்​சி​யிலும் பெண்​களுக்கு பாது​காப்பு இல்​லை. குற்​ற​வாளி​கள் இரு​வருக்​கும் கடும் தண்​டனை வழங்க வேண்​டும். இவ்​வாறு கூறி​னார்.

எம்​எல்ஏ விளக்​கம்: இந்த விவ​காரம் குறித்து எம்​எல்ஏ சரவணன் கூறுகை​யில், “பா​திக்​கப்​பட்​ட​தாக கூறப்​படும் பெண் எனக்கு களங்​கம் கற்​பிக்க வேண்​டும் என்ற நோக்​கில் சிலரது தூண்​டு​தலில் தவறான புகார் தெரிவிக்​கிறார். குறிப்​பிட்ட இரு​வர் கட்சி உறுப்​பினர் பொறுப்​பில் இருந்​தும் நீக்​கப்​பட்​டுள்​ளனர். எம்​எல்ஏ என்ற முறை​யில் பலர் என்​னோடு புகைப்​படம் எடுப்​பதுண்​டு. அவர்​கள் செய்​யும் தவறுகளுக்கு எப்படி நான் பொறுப்​பாக முடியும்” என்​றார்​.

“பாலியல் வன்கொடுமை செய்த 2 தவெக நிர்வாகிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” - பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்
4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்: திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ.கருணாநிதியும் ஐக்கியம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in