குடியரசு துணைத் தலைவர் நவ.11-ல் தூத்துக்குடி வருகை

குடியரசு துணைத் தலைவர் நவ.11-ல் தூத்துக்குடி வருகை
Updated on: 
1 min read

தூத்துக்குடி: குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன் வரும் 11-ம் தேதி தூத்​துக்​குடி வரு​கிறார். வ.உ.சி. கல்​லூரி மற்​றும் தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்கி சார்​பில் நடை​பெறும் விழாக்​களில் அவர் கலந்து கொள்​கிறார்.

குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், தமிழக ஆளுநர் ராஜேந்​திர விசுவநாத் அர்​லேகர் ஆகியோர் வரும் 11-ம் தேதி காலை விமானம் மூலம் தூத்​துக்​குடி வரு​கின்​றனர். அவர்​களுக்கு விமான நிலை​யத்​தில் அதி​காரி​கள் வரவேற்பு அளிக்​கின்​றனர்.

காலை 11 மணிக்கு வ.உ.சி. கல்​லூரி​யில் பவள விழாவை முன்​னிட்டு நடை​பெறும் முன்​னாள் மாணவர்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் இரு​வரும் பங்​கேற்​கின்​றனர். பின்​னர், தூத்​துக்​குடி மாணிக்​கம் மஹாலில் பகல் 12 மணிக்கு நடை​பெறும் தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்​கி​யின் 105-வது ஆண்டு விழா​வில் பங்​கேற்​கின்​றனர்.

குடியரசு துணைத் தலை​வர் மற்​றும் ஆளுநர் வருகையை முன்​னிட்டு, தூத்​துக்​குடி​யில் பாது​காப்பு ஏற்​பாடுகள் குறித்து, திருநெல்​வேலி சரக டிஐஜி திருநாவுக்​கரசு, தூத்​துக்​குடி எஸ்.பி. சிவபிரசாத் ஆகியோர் விமான நிலை​யம், வ.உ.சி. கல்​லூரி வளாகம் மற்​றும் மாணிக்​கம் மஹால் ஆகிய இடங்​களை ஆய்வு செய்து, காவல் துறை அதி​காரி​களுக்கு பல்​வேறு அறி​வுரைகளை வழங்​கினர்.

இதுபோல், ஆட்சி​யர் விஷு மகாஜன் நேற்று காலை​யில் வ.உ.சி. கல்​லூரி அரங்​கம் உள்​ளிட்ட இடங்​களை பார்​வை​யிட்டு அங்கு செய்ய வேண்​டிய ஏற்​பாடுகள் குறித்து அதி​காரி​களுக்கு ஆலோ​சனை வழங்​கினார். ஆய்​வின் போது தூத்​துக்​குடி மாநக​ராட்சி ஆணை​யர் சி.பிரியங்கா, தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்கி நிர்​வாக அலு​வலர் அசோக்​குமார், துணைத் தலை​வர் லட்​சுமி பிரகாஷ், வ.உ.சி. கல்​லூரி முதல்​வர் சொ.வீர​பாகு உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன் வரும் 11-ம் தேதி தூத்​துக்​குடி வரும் நிலை​யில் பாது​காப்பு ஏற்​பாடுகள் குறித்து விமான நிலை​யத்​தில் டிஐஜி திருநாவுக்​கரசு, எஸ்.பி. சிவபிரசாத் ஆகியோர் ஆய்வு செய்​தனர்.குடியரசு துணைத் தலை​வர் பங்​கேற்​கும் விழா நடை​பெறும் தூத்​துக்​குடி வ.உ.சி. கல்​லூரி அரங்​கில் மாவட்ட ஆட்சி​யர் விஷு மகாஜன் ஆய்வு செய்​தார்.

குடியரசு துணைத் தலைவர் நவ.11-ல் தூத்துக்குடி வருகை
புது நம்பிக்கை பிறக்கட்டும்: முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து

X