நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்யக் கோரி மக்களவை சபாநாயகருக்கு விஎச்பி கடிதம்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் | கோப்புப் படம்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் | கோப்புப் படம்.

Updated on
1 min read

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அளித்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக விஎச்பி இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் மக்களவை சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பாரம்பரியமிக்க தீபத் தூணில் திருக்கார்த்திகை முன்னிட்டு தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில் எந்தக் குறையும் கூற முடியாது.

ஆனால் சிறுபான்மையினர் ஓட்டு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ், திமுக கூட்டணி எம்பிகள் நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி மனு அளித்துள்ளனர். இது நீதித்துறைக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த தீர்மானத்தை ஏற்றால் முக்கியமான வழக்குகளில் இனி நீதிபதிகள் சட்டத்துக்கு உட்பட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படும்.

இதனால் இந்தி கூட்டணி மனுவை சபாநாயகர் தள்ளுபடி செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவின் படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துணில் தீபம் ஏற்ற தமிழக அரசுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை தமிழகத்தில் நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் | கோப்புப் படம்.</p></div>
கார்த்திகை தீபத்தூணா அல்லது அளவீட்டுக் கல்லா என சர்ச்சை: திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை ஆய்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in