விஎச்பி முன்னோடி தலைவர் வேதாந்தம் காலமானார்: சென்னையில் இன்று இறுதிச் சடங்கு

விஎச்பி முன்னோடி தலைவர் வேதாந்தம் காலமானார்: சென்னையில் இன்று இறுதிச் சடங்கு
Updated on
1 min read

சென்னை: விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் முன்னோடி தலைவராகவும், சர்வதேச செயல் தலைவராகவும் செயல்பட்ட எஸ்.வேதாந்தம் (93) வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

கேரள மாநிலம் கொல்லத்தில் 1933-ம் ஆண்டு வசதியான குடும்பத்தில் எஸ்.வேதாந்தம் பிறந்தார். 16 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். பட்டப்படிப்பை முடித்த பிறகு, திருநெல்வேலியில் பிரபல தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு பணியில் இருந்தவாறே நெல்லை மாவட்ட ஆர்எஸ்எஸ் செயலாளராக 1950-ல் பணியாற்றத் தொடங்கினார்.

பல்வேறு பொறுப்புகள்: பிறகு, ஆர்எஸ்எஸ் முழுநேரஊழியரான எஸ்.வேதாந்தம், அந்த அமைப்பில் பல்வேறு பொறுப்புகள் வகித்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சிக்கு பங்களித்தார். விஎச்பி மாநில அமைப்புச் செயலாளர் தொடங்கி, அகில உலக செயல் தலைவர் வரை பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

இந்நிலையில், எஸ்.வேதாந்தம் தனது 93-வது வயதில், வயது மூப்பு காரணாக, சென்னையில் நேற்று பகல் 11.45 மணிக்கு காலமானார். இறுதிச்சடங்கு, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஆக.30) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

தலைவர்கள் இரங்கல்: இதற்கான ஏற்பாடுகளை, விஷ்வ ஹிந்து வித்ய கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்ரி, விஎச்பி மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி, மாநில பொதுச் செயலாளர் எஸ்.சோமசுந்தரம், மாநில இணைப் பொதுச் செயலாளர் ஆர்.ஜி.ராமசுப்பு ஆகியோர் செய்து வருகின்றனர்.

எஸ்.வேதாந்தம் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஎச்பி முன்னோடி தலைவர் வேதாந்தம் காலமானார்: சென்னையில் இன்று இறுதிச் சடங்கு
ஜல்லிக்கட்டை இழிவாகப் பேசினாரா தவெக எம்எல்ஏ? - அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in