திமுக கூட்டணிக்கு குட்பை சொல்லத் தயாராகிறாரா வேல்முருகன்?

மாவட்ட அமைச்சருடன் மல்லுக்கட்ட திட்டம்
வேல்முருகன் | கோப்புப்படம்
வேல்முருகன் | கோப்புப்படம்
Updated on
1 min read

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், திமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் தங்களுக்கு திருப்தி இல்லாததால் கூட்டணியை விட்டு விலகுவது தொடர்பாக தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளைக் கேட்டு கோரிக்கை வைத்திருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி, குறைந்தபட்சம் 3 தொகுதிகளாவது தங்களுக்கு வேண்டும் என தெரிவித்தது. அதேசமயம், கட்சியின் தலைவர் வேல்முருகன் இம்முறை பண்ருட்டி தொகுதிக்குப் பதிலாக தனது சொந்தத் தொகுதியான நெய்வேலியில் போட்டியிடவும் திமுக-விடம் விருப்பம் தெரிவித்திருந்தார்.

மேலும், அடுத்து அமையும் ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழர் நலன் சார்ந்த பத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதற்கும் உத்தரவாதம் அளிக்கக் கேட்டிருந்தார். ஆனால், வேல்முருகனின் இந்த விருப்பங்கள் தொடர்பாக திமுக தரப்பிலிருந்து திருப்தியான பதில்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையிலேயே, திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது தொடர்பாக தனது கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக கூட்டணியை விட்டு வெளியேறி தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பது அல்லது தனது கோரிக்கைகளை ஏற்கும் அணியில் சேர்வது என இரண்டு விதமான நிலைப்பாட்டில் வேல்முருகன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் வேல்முருகனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், “கூடுதல் தொகுதிகளையும், எங்கள் கோரிக்கைகளையும் ஏற்காத பட்சத்தில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது என முடிவெடுத்துள்ளோம். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே நாங்கள் கூட்டணிக்குள் தொடரக் கூடாது என குழப்பத்தை உண்டாக்கி வருகிறார்.

இந்த மாவட்டத்தில் அவர் மட்டுமே செல்வாக்குடன் இருக்க வேண்டும் என நினைப்பதே இதற்குக் காரணம். ஒருவேளை, திமுக கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறினால், அந்த அமைச்சர் போட்டியிடும் தொகுதியில் அண்ணன் வேல்முருகனோ அல்லது அவரது தம்பியோ நிச்சயம் போட்டியிடுவார்கள்” என்றனர்.

வேல்முருகன் | கோப்புப்படம்
“4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்” - அமித் ஷா சந்திப்புக்குப் பின் இபிஎஸ் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in