உயர் கல்வி நிறுவனங்களில் 3-ம் மொழி கட்டாயம் எனும் ஆணைக்கு வேல்முருகன் எதிர்ப்பு

உயர் கல்வி நிறுவனங்களில் 3-ம் மொழி கட்டாயம் எனும் ஆணைக்கு வேல்முருகன் எதிர்ப்பு
Updated on
1 min read

சென்னை: உயர்​கல்வி நிறு​வனங்​களில் 3-ம் மொழியை கட்​டாய​மாக்​கும் பல்​கலைக்​கழக மானியக் குழு​வின் ஆணை​யை, தமிழகத்​தில் செயல்​படுத்​தக் கூடாது என்​று, தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்முருகன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்​து, அவர் வெளி​யிட்ட அறிக்​கை: பல்​கலைக்​கழக மானியக் குழு, அனைத்து உயர்​கல்வி நிறு​வனங்​களுக்​கும் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில், மத்​திய பல்​கலைக் கழகங்​கள், மாநில பல்​கலைக் கழகங்​கள், தனி​யார் நிகர்​நிலைப் பல்​கலைக் கழகங்​கள், தொழில்​நுட்​பக் கல்வி நிறு​வனங்​கள், அனைத்து பல்​கலைக் கழகங்​களு​டன் இணைக்​கப்​பட்ட கல்​லூரி​கள் ஆகிய​வற்​றில் இப்​போது கற்​பிக்​கப்​படும் இரு மொழிகளு​டன், மூன்​றாவ​தாக ஒரு மொழி கண்​டிப்​பாக கற்​பிக்​கப்பட வேண்​டும் என்று கூறப்​பட்​டுள்​ளது.

முதல் மொழி​யாக உள்​ளூர் மொழி​யும், 2-ம் மொழி​யாக ஆங்​கில​மும் கற்​பிக்​கப்​படும் நிலை​யில், 3-ம் மொழி​யாக இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் 8-வது அட்​ட​வணை​யில் இடம் பெற்​றிருக்​கும் 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழி கற்​பிக்​கப்பட வேண்​டும் என்​றும் பல்​கலைக்​கழக மானியக் குழு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

மாணவர்​கள் விரும்​பி​னால் எத்​தனை மொழிகளை வேண்​டு​மா​னாலும் கற்​றுக் கொள்​ளட்​டும். அம்​மாணவர்​களுக்கு தமிழக அரசு தேவை​யான வசதி​களை ஏற்​படுத்​திக் கொடுக்க வேண்​டும். ஆனால், மாணவர்​களின் விருப்​பம் இல்​லாமல், எந்​தவொரு மொழி​யும் திணிக்​கப்​படு​வதை ஏற்க முடி​யாது.

பல்​கலைக்​கழக மானியக் குழு ஆணை​யின் மூலம், இந்​தி, சமஸ்​கிருத மொழிகளை திணிக்க மத்​திய அரசு முயல்​வது கண்​கூ​டாகத் தெரி​கிறது. எனவே, உயர்​கல்வி நிறு​வனங்​களில் 3-ம் மொழியை கட்​டாய​மாக்​கும் பல்​கலைக்​கழக மானியக் குழு​வின் ஆணை​யை, தமிழகத்​தில் செயல்​படுத்​தக் கூடாது என்று தெரி​வித்​துள்​ளார்.

உயர் கல்வி நிறுவனங்களில் 3-ம் மொழி கட்டாயம் எனும் ஆணைக்கு வேல்முருகன் எதிர்ப்பு
போதைப் பொருள் வழக்கில் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா? - சென்னை போலீஸ் விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in