நிர்வாகத் தோல்வியால் நெரிசல்: தவாக வேல்முருகன் விமர்சனம்

நிர்வாகத் தோல்வியால் நெரிசல்: தவாக வேல்முருகன் விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன் வெளி​யிட்ட அறிக்​கை​: மனிதன் தன் வாழ்​நாளில் குடும்​பத்​துடன் மகிழ்ச்​சி​யாக செல​விட வேண்​டிய பொன்​னான நேரங்​கள், இன்​றைக்கு சென்​னை​யில் போக்​கு​வரத்து நெரிசல்​களுக்கு மத்​தி​யில் கரைந்து கொண்​டிருக்​கின்​றன.

ஆம்​புலன்ஸ் வாக​னங்​கள் கூட சிக்​னல்​களில் காத்​துக் கிடக்​கின்​றன. இது முழுக்க முழுக்க நிர்​வாக திட்​ட​மிடலின் படு​தோல்​வி​யாகும். கோயம்​பேட்​டில் இருந்து கிளாம்​பாக்​கத்​துக்கு பேருந்து நிலை​யத்தை மாற்​றி​னால், சென்​னை​யில் நெரிசல் குறை​யும் என்​றனர்; எங்கே அந்த மாற்​றம் நிகழ்ந்​தது? இதற்​கிடையே மெட்ரோ பணி​கள், பாதாள சாக்​கடை பணி​கள் போன்​றவை எவ்​வித மாற்​றுப்​பாதை திட்​ட​மிடலும் இன்றி மக்​களின் பொறுமையை சோதிக்​கின்​றன.

புதிய தொழிற்​சாலைகள், பன்​னாட்டு நிறு​வனங்​களின் அலு​வல​கங்​கள், தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள் சென்​னை​யில் திறக்​கப்​படும்​போது ஆயிரக்​கணக்​கான வாக​னங்​களும், லட்​சக்​கணக்​கான மக்​களும் இந்த நகரின் சாலைகளில்​தான் வந்​திறங்​கு​கிறார்​கள்.

சென்​னை​யின் சாலைகளை அகலப்​படுத்​து​வ​தால் மட்​டும் இங்​குள்ள பிரச்​சினை தீராது. சென்​னை​யில் ஆமை வேகத்​தில் நடக்​கும் மெட்ரோ மற்​றும் இதர உள்​கட்​டமைப்பு பணி​களை உரிய மாற்​றுப்​பாதைகளு​டன், போர்க்​கால அடிப்​படை​யில் விரைந்து முடிக்க வேண்​டும்.

சென்​னையை மட்​டுமே மைய​மாகக் கொண்டு குவி​யும் முதலீட்​டுக் கொள்​கையை கைவிட்​டு, அனைத்து மாவட்​டங்​களை​யும் உள்​ளடக்​கிய பரவலாக்​கப்​பட்ட புதிய வளர்ச்​சித் திட்​டங்​களை உரு​வாக்கி அரசு செயல்​படுத்த வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ தெரி​வித்​துள்​ளார்​.

நிர்வாகத் தோல்வியால் நெரிசல்: தவாக வேல்முருகன் விமர்சனம்
ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி பெறாமல் இழுத்தடிப்பதா? - உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in