திமுக கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா? - வேல்முருகன் பரிசீலனை

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

Updated on
1 min read

​தி​முக கூட்​ட​ணி​யில் கூடு​தல் இடங்​களை​விட எங்​களின் கோரிக்​கை​கள் முக்​கி​யம். இதை நிறை​வேற்​ற​வில்லை எனில் கூட்​ட​ணி​யில் தொடர்​வதா அல்​லது வேண்​டாமா என முடிவு செய்​வோம் என்று தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் தெரி​வித்​தார்.

தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி​யின் தலைமை உயர்​நிலைக்​குழு அவசரக் கூட்​டம் சென்​னை​யில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் மற்​றும் கட்சி நிர்​வாகி​கள் பங்​கேற்​ற​னர். கூட்​டத்​தில், வரும் சட்​டப்​பேரவை தேர்​தல் தொடர்​பாக​வும், அரசி​யல் நிலைப்​பாடு​கள் குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

பின்​னர் தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் கூறிய​தாவது: நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலில் எங்​கள் கட்​சிக்கு கூடு​தல் இடங்​கள் கேட்டு திமுக​வின் பேச்​சு​வார்தை குழு​விடம் கோரிக்கை முன்​வைத்​திருந்​தோம். ஆனால், இப்​போது வரை கூடு​தல் இடங்​கள் பற்றி தகவல் கிடைக்​கபெற​வில்​லை.

கூடு​தல் இடங்​கள் தரவில்​லை, கோரிக்​கை​களை நிறை​வேற்​ற​வில்லை என்ற நிலையை திமுக எடுக்​குமெனில், திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் தொடர்​வதை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு​வின் பெரும்​பான்​மை​யான உறுப்​பினர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர். எனவே, கோரிக்​கையை ஓரிரு நாட்​களில் நிறை​வேற்ற முன்​வ​ரு​கிற​தா, இல்​லையா என தெரிந்து அதற்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்க தீர்​மானம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது.

சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும், திருச்சி சிறப்பு முகாமை நிரந்​தர​மாக மூடி, அங்கு தடுத்து வைக்​கப்​பட்​டுள்ள ஈழத்​தமி​ழர்​களுக்கு பொது​மன்​னிப்பு வழங்​கி, அவர்​கள் விரும்​பிய நாடு​களுக்கு செல்ல அனு​ம​திக்க வேண்​டும் என்​பது உள்பட 10 கோரிக்​கை​களை கொடுத்து உள்​ளோம். எங்​களுக்கு கூடு​தல் இடங்​களை விட தமிழ்​சமூகத்​தின் மிக​முக்​கிய​மான இக்​கோரிக்​கை​களை நிறை​வேற்ற அரசு முன் வரவேண்​டும்.இவ்​வாறு அவர் கூறி​னார்.

காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு விவ​காரத்​தில் மத்​திய அரசைக் கண்​டித்​து, திமுக கூட்​டணி கட்​சிகள் சார்​பில் தமி​ழ​கம் முழு​வதும் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் பங்​கேற்​க​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் </p></div>
“அதிமுகவோடு உங்கள் மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டீர்களா?” - பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in