“அதிமுகவோடு உங்கள் மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டீர்களா?” - பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னையில் நேற்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் நேற்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Updated on
2 min read

“அ​தி​முக என்ற கட்​சி​யோடு சேர்த்து உங்​கள் மனசாட்​சி​யை​யும் பாஜக​விடம் அடகு வைத்​து​விட்​டீர்​களா” என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்பி உள்​ளார்.

திமுக சிறு​பான்​மை​யினர் நல உரிமைப் பிரிவு சார்​பில் இஃப்​தார் நோன்பு திறப்பு விழா, அமைந்​தகரை​யில் நேற்று நடை​பெற்​றது. திமுக சிறு​பான்​மை​யினர் நல உரிமைப் பிரிவு தலை​வர் டி.பி.எம்​.மொகிதீன் கான் தலை​மை​யில் நடந்த இவ்​விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கலந்து கொண்டு சிறு​பான்​மை​யினருக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார். தமிழக அரசின் தலைமை காஜி ரமலான் நோன்பை திறந்து வைத்​தார்.

விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: திமுக​வுக்​கும், இஸ்​லாமியர்​களுக்​கும் இருக்​கக்​கூடிய உறவு இன்​று, நேற்று ஏற்​பட்​டதல்ல. இந்த இயக்​கம் தொடங்​கியது முதல் உண்​டான உறவு. காயிதே மில்​லத் காலம் முதல் அண்​ணா, கருணாநி​தி, இப்​போது நான் என தலை​முறை தலை​முறை​யாக தொடர்ந்து கொண்​டிருக்​கிறது. நம்மை யாராலும் ஒரு​நாளும் பிரிக்க முடி​யாது. திமுக ஆட்​சி​யில் சிறு​பான்மை மக்​களுக்​காக செயல்​படுத்​தப்​பட்டு வரும் பட்​டியல் என்​பது மிக நீள​மானது. உங்​களுக்கு எப்​போதெல்​லாம் என்ன தேவைப்​பட்​டாலும், அதை செயல்​படுத்​து​வது தான் திமுக.

பெண்​களே மிகப்பெரிய பலம்: திமுக அரசின் மிகப்​பெரிய பலமே பெண்​கள் தான். அதி​லும் இஸ்​லாமிய பெண்​கள் நம் கூட இருக்​கும்​போது நம்​முடைய பலம் இன்​னும் பலமடங்கு பெரு​கும். இஸ்​லாமிய மக்​களுக்​கான அனைத்து அமைப்​பு​களுக்கு இடையே​யும் ஒருங்​கிணைப்பை ஏற்​படுத்​தி​யது திமுக தான். இந்த ஒற்​றுமை​தான் தமி​ழ​கத்​துக்கு அவசி​யம். இதற்கு நேர்​மாறான நிலைமை பாஜக ஆளக்​கூடிய மாநிலங்​களில் இருக்​கிறது. முஸ்​லிம்​கள் மட்​டுமல்ல, கிறிஸ்​தவர்​கள் கூட நிம்​ம​தி​யாக கிறிஸ்​து​மஸை கொண்​டாட முடிய​வில்​லை.

சிறு​பான்​மை​யின மக்​களுக்கு எதி​ரான வன்​முறையை பற்​றி, என்​றாவது எதிர்க்​கட்சி தலை​வர் பழனி​சாமி கருத்து சொல்​லி​யிருக்​கி​றா​ரா? பழனி​சாமி​யிடம் நான் கேட்​ப​தெல்​லாம், அதி​முக என்ற கட்​சி​யோடு சேர்த்து உங்​கள் மனசாட்​சி​யை​யும் பாஜக​விடம் அடகு வைத்​து​விட்​டீர்​களா? சிறு​பான்​மை​யினர் மீதான வெறுப்பை தூண்​டி​விட்​டு, அதில் குளிர்​காயக்​கூடிய பாஜக​வுடன் கூட்​டணி வைத்​திருக்​கும் நீங்​கள் எப்​படி சிறு​பான்​மை​யினரின் உரிமை​யை​யும் பாது​காப்​பை​யும் நிலை​நாட்​டு​வீர்​கள்?

பழனி​சாமி மட்​டுமல்ல, பலரும் இப்​படித்​தான் நோன்பு திறக்​கும் ஒரு நாள் மட்​டும் நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொள்​வார்​கள். ஆனால் இஸ்​லாமியருக்கு ஏதாவது பிரச்​சினை வந்​தால் அமை​தி​யாகி விடு​வார்​கள். ஓடி ஒளிந்து கொள்​வார்​கள். எதிர்க்​கட்​சி​யாக இருந்​த​போதும் சரி, ஆட்​சி​யில் இருக்​கும்​போதும் சரி, இஸ்​லாமியருடைய உரிமை​களுக்​காக முதல் ஆளாக குரல் கொடுப்​பது திமுக தான்.

களத்​தில் இறங்கி போராடு​கிறது. சட்​டப்​பேர​வை​யிலும் தீர்​மானத்தை நிறை​வேற்​றுகிறது. நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுக்​கிறது. இதனால​தான் சிறு​பான்​மை​யின மக்​களும் திமுக​வுக்கு துணை​யாக நிற்​கின்​ற​னர். இந்த ஒற்​றுமை எந்​நாளும் தொடர வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நாளை முதல் திமுக நேர்​காணல்: தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி மாநில சட்​டப்​பேரவை தேர்​தல்​களில் திமுக சார்​பில் போட்​டி​யிட விருப்​பமனு அளித்​தவர்​களிடம் 17-ம் தேதி (நாளை ) முதல் 22-ம் தேதி வரை சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள அண்ணா அறி​வால​யத்​தில் நேர்​காணல் நடை​பெறவுள்​ளது. 17-ம் தேதி புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் மாவட்​டத்​துக்​கும், 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தமி​ழ​கத்​துக்கு மாவட்ட வாரி​யாக​வும் நேர்​காணல் நடை​பெற உள்​ளது. இதற்கான அறி​விப்பை திமுக பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன் வெளியிட்​டுள்​ளார்.

<div class="paragraphs"><p>சென்னையில் நேற்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.</p></div>
“அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்” - விஜய் மீது வைகோ மறைமுக விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in