மார்ச் 10 முதல் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: வேளச்​சேரி - பரங்​கிமலை இடையே பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் மார்ச் 10-ம் தேதி முதல் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​வதன் மூலம், தாம்​பரம் - கடற்​கரைக்கு மேலும் ஒரு இணைப்பு சேவை கிடைத்​துள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சென்னை கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் (மேம்​பால ரயில் வழித்​தடம்) தடத்​தில், தினசரி 100 மின்​சார ரயில் சேவை​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், வேளச்​சேரி - பரங்​கிமலை இடையி​லான 5 கி.மீ. தொலைவை இணைக்​கும் வகை​யில், பறக்​கும் ரயில் வழித்தட திட்​டப்​பணி, 2008-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது.

பல்வேறு தடைகளுக்கு பிறகு 17 ஆண்​டு​களாக நடந்து வந்த ரயில் இணைப்பு பணி​கள் தற்​போது நிறைவடைந்​துள்​ளன. இதையடுத்​து, கடந்த ஆண்டு நவ.7, டிச.15 தேதி​களில் சோதனை ஓட்​டம் நடத்​தப்​பட்​டது.

இதற்​கிடையே, எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி​யின் ஒருபகு​தி​யாக 10, 11-வது நடைமேடைகளில் நடை மேம்​பாலம் அமைக்​கும் பணி நடை​பெறு​வ​தால், கடற்​கரை - தாம்​பரம் மார்க்​கத்​தில் ரயில் சேவை​கள் பெரு​மள​வில் குறைக்​கப்​பட்​டுள்​ளன. இதனால், பயணி​கள் கடும் சிரமத்தை சந்​தித்து வரு​கின்​றனர்.

இதையடுத்​து, தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்​.சிங் தலை​மை​யில் நேற்று முன்​தினம் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், பயணி​கள் வசதிக்​காக, வேளச்​சேரி - பரங்​கிமலை இடையே மின்​சார ரயில் சேவை மார்ச் 10-ம் தேதி தொடங்க முடிவு செய்​யப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்​து, தெற்கு ரயில்வே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “வேளச்​சேரி - பரங்​கிமலை மின்​சார ரயில் சேவை மார்ச் 10-ம் தேதி முதல் தொடங்​க​வுள்​ளது.

இதன்​மூலம், தாம்​பரத்​தில் இருந்து கடற்​கரை செல்​லும் பயணி​களுக்​கு, மற்​றொரு இணைப்பு ரயில் சேவை கிடைக்க வழி​வகை செய்​யப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
கடற்கரை - தாம்பரம் இடையே சிறப்பு இலவச பேருந்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in