

மு. வீரபாண்டியன்
கோப்புப் படம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி தான் பல போராட்டங்கள் நடக்கின்றன. இத்தகைய போராட்டங்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். போராடுபவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
திமுக அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. ஆட்சியில் குறைகளும் இருக்கிறது; நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளும் இருக்கின்றன என்பதை முதல்வரே கூறியுள்ளார். தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். கூட்டணியில் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு வருவது இயல்பு தான். திமுக கூட்டணியில் ஜனநாயக ரீதியாக கருத்துகள் கூற சுதந்திரம் உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் முதல்வர் தீர்வு காண்பார். ஆட்சியில் பங்கு என்று கோரமாட்டோம். கூடுதல் தொகுதிகளை பெற்று வெற்றி பெறுவோம் என்றார்.