“சிபிஐ, ஈடி மூலம் தமிழகத்தில் கூட்டணி உருவாக்கியுள்ளார் அமித் ஷா” - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

மத்​திய முகமை​கள் உதவி​யுடன் அமித் ஷா தமி​ழ​கத்​தில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை உரு​வாக்​கி​யுள்​ளார் என்று சட்​டப்​பேரவை காங்​கிரஸ் தலை​வர் செ.​ராஜேஷ்கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

தமிழ்​நாடு மாண​வர் காங்​கிரஸ் மாநில செயற்​குழு கூட்​டம் சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் நேற்று நடை​பெற்​றது. அகில இந்​திய மாண​வர் காங்​கிரஸ் தலை​வர் வருண் சவுத்​ரி, சட்​டப்​பேரவை காங்​கிரஸ் தலை​வர் செ.​ராஜேஷ் கு​மார் ஆகி​யோர் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் மத்​திய அரசுக்கு எதி​ராக பல்​வேறு தீர்​மானங்​கள் நிறை​வேற்​றப்​பட்டன.

இக்​கூட்​டத்​தில் பேசிய வருண் சவுத்​ரி, “2000-ம் ஆண்​டுக்​குப் பிறகு தமி​ழ​கத்​தில் பிறந்த இளைஞர்​களை ஒருங்​கிணைத்து ஒரு மாநில அளவி​லான மாநாட்டை நடத்த வேண்​டும். அதில் பங்​கேற்க காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தியை நான் அழைத்து வரு​கிறேன்” என்​றார்.

நிகழ்ச்​சி​யின் முடி​வில், ராஜேஷ்கு​மார் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக -காங்​கிரஸ் கூட்​டணி கடந்த 2002-ம் ஆண்டு முதல் இருந்து வரு​கிறது. இந்​தக் கூட்​ட​ணி​யில் எந்த தொய்​வும் இல்​லை. தமி​ழ​கத்​தில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை மத்​திய அமைச்​சர் அமித் ஷா ரிமோட் கன்ட்​ரோல் மூலம் இயக்கி வரு​கி​றார்.

மத்​திய முகமை​களான ஈடி, சிபிஐ, ஐடி போன்ற துறை​களை வைத்து இக்​கூட்​ட​ணியை உரு​வாக்​கி​யுள்​ளார். அதற்கு உரிய பதிலை வரும் தேர்​தலில் கொடுப்​பார்​கள்.

கூட்​டணி பேச்சு நல்​லபடி​யாக முடி​யும்​. ஆட்​சி, அதி​காரத்​தில் பங்கு என்​ப​தில் நாங்​கள் உறு​தி​யாக இருக்​கி​றோம். அது குறித்து எங்​கள் தலைமை பேசி உரிய முடிவை எடுக்​கும்​ என்றார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
‘கை சின்னத்தில் வாக்களியுங்கள்’ - மதுரையில் திமுகவினரை சீண்டிய திடீர் போஸ்டர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in