மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு
Updated on
1 min read

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு தலைமையில் மாற்றுக் கட்சியினர் 1,000-க்கும் மேற்பட்டோர் இன்று தி.மு.க.வில் இணைந்தனர்.

இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று (ஜூன் 07) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் விசிக மாநில ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு திமுகவில் இணைந்தார். மேலும் அவர் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எ.வ.வேலு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிர மணியன், முன்னாள் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு
ஹைபர்​லிங்க் க்ரைம் த்ரில்லரில் ‘மூன்​றாம் கண்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in