ஹைபர்​லிங்க் க்ரைம் த்ரில்லரில் ‘மூன்​றாம் கண்’

ஹைபர்​லிங்க் க்ரைம் த்ரில்லரில் ‘மூன்​றாம் கண்’
Updated on
1 min read

அறி​முக இயக்​குநர் சகோ கணேசன் இயக்​கத்​தில், விதார்த், கலையரசன், த்ரி​குண், சந்​தோஷ் பிர​தாப், தேஜு அஸ்வினி ஆகியோரின் நடிப்​பில், ஹைபர்​லிங்க் ஆந்​தாலஜி வடி​வில் க்ரைம் த்ரில்​ல​ராக உரு​வாகி இருக்​கும் திரைப்​படம் ‘மூன்​றாம் கண்’.

டிரெண்​டிங் என்​டர்​டெ​யின்மென்ட் மற்​றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் சார்​பில் கே.சசிகு​மார் தயாரித்​துள்​ளார். ஜூன் 12-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்தியாளர்​கள் சந்​திப்பு சென்னையில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்டனர்.

இயக்​குநர் சகோ கணேசன் பேசும்​போது, “இது வித்​தி​யாச​மான கமர்​ஷிய​ல் திரைக்​கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி, வான்​டேஜ் பாயின்ட் போன்ற படங்​களில் பயன்படுத்தப்​பட்ட திரைக்​கதை டெக்​னிக்​கான ‘ரோஷ​மான் எபெக்ட்’ என்ற விஷ​யத் தைப் பயன்​படுத்தி இருக்​கிறோம். இந்​தக் கதையை எழுதும் ​போதே சில கதா​பாத்​திரங்​களுக்கு குறிப்​பிட்ட நடிகர்​களை மனதில் வைத்​திருந்தேன்.

விதார்த், சந்​தோஷ் பிர​தாப், கலை​யரசன் உள்​ளிட்ட அனைவரும் எதிர்​பார்த்​ததை விட சிறப்​பாக நடித்​துள்​ளனர். கலை​யரசனின் கதா​பாத்​திரம் மிக​வும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்​தை​யும் மிக நுட்​ப​மாக வெளிப்படுத்தியுள்​ளார். சந்​தோஷ் பிர​தாப்பை இந்​தக் கதாபாத்திரத்​துக்​காகத் தேர்வு செய்​தது சரி​யான முடிவு என்பதைப் படப்​ பிடிப்​பின் போது உணர்ந்​தேன்” என்​றார்.

ஹைபர்​லிங்க் க்ரைம் த்ரில்லரில் ‘மூன்​றாம் கண்’
Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 20

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in