ராமேசுவரம் ரயில் நிலை​யத்​தில் ஆய்வு மேற்​கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்​.என்​.சிங். உடன், மதுரை கோட்​ட மேலா​ளர்​ ஓம்​பிர​காஷ் மீனா உள்​ளிட்​டோர்​.

ராமேசுவரம் ரயில் நிலை​யத்​தில் ஆய்வு மேற்​கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்​.என்​.சிங். உடன், மதுரை கோட்​ட மேலா​ளர்​ ஓம்​பிர​காஷ் மீனா உள்​ளிட்​டோர்​.

ராமேசுவரம் - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் தொடங்கும்

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
Published on

ராமேசுவரம்: சென்​னை-​ராமேசுவரம் இடையி​லான வந்தே பாரத் ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்க வாய்ப்​புள்​ள​தாக தெற்கு ரயில்வே பொது மேலா​ளர் ஆர்​.என்​.சிங் கூறி​னார்.

ராமேசுவரம் ரயில் நிலை​யத்​தில் ரூ.90.20 கோடி மதிப்​பிலான மேம்​பாட்​டுப் பணி​கள் 2022 மே மாதம் முதல் நடை​பெற்று வரு​கின்​றன. இப்​பணி​களை நேற்று ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலா​ளர் ஆர்​.என்​.சிங், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ராமேசுவரம் ரயில் நிலை​யம் மேம்​படுத்​தப்​பட்ட ரயில் நிலை​ய​மாக மாற்​றப்​பட்​டு, கட்​டு​மானப் பணி​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

பயணி​களுக்​குத் தேவை​யான வாகன நிறுத்​து​மிடம், குளிரூட்​டப்​பட்ட ஓய்​வறை, உணவகம் உள்​ளிட்ட அனைத்து அடிப்​படை வசதி​களும் கிடைக்​கும் வகை​யில் பணி​கள் நடக்​கின்​றன. இன்​னும் ஒன்​றரை மாதத்​தில் பணி​கள் முடிவடைந்​து, மக்​கள் பயன்​பாட்​டுக்கு ரயில் நிலை​யம் கொண்டு வரப்​படும்.

ராமேசுவரத்​திலிருந்து அடுத்த மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்​ளது. பாம்​பன் கடலில் அமைந்​துள்ள பழைய ரயில் பாலத்​தின் மையப் பகு​தி​யில் உள்ள இரும்பு தூக்​குப் பலத்தை அகற்​றும் பணி நடந்து வரு​கிறது.

தூக்​குப் பாலத்தை பாது​காப்​பான முறை​யில் அகற்​றி, அதை ராம​நாத​புரம் அருகே பொது​மக்​கள் பார்​வை​யிடும் வகை​யில் அமைக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

ராமேசுவரம்​-தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைப்​ப​தற்​கான பணி​களைத் தொடங்க மாநில அரசின் சுற்​றுச்​சூழல் அனு​மதி கிடைப்​ப​தில் சிக்​கல்​கள் உள்​ளன. அனு​மதி கிடைத்த பின்​னர் ரயில் பாதை அமைக்​கும் பணி​களைத் தொடங்​கு​வது குறித்து முடிவு செய்​யப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>ராமேசுவரம் ரயில் நிலை​யத்​தில் ஆய்வு மேற்​கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்​.என்​.சிங். உடன், மதுரை கோட்​ட மேலா​ளர்​ ஓம்​பிர​காஷ் மீனா உள்​ளிட்​டோர்​.</p></div>
கோத்தகிரியில் சிறுத்தை தாக்கி ஐ.டி. ஊழியர் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in