“ஆர்எஸ்எஸ் குறித்த அவதூறு கருத்துகளை அமைச்சர்கள் திரும்பப் பெற வேண்டும்” - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

Updated on
1 min read

சென்னை: “சட்டப்பேரவையில் தெரிவித்த ஆர்எஸ்எஸ் குறித்த அவதூறு கருத்துகளை அமைச்சர்கள் திரும்பப் பெற வேண்டும்” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் மீது சட்டப்பேரவையில் சில உறுப்பினர்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, நயினார் நாகேந்திரன் பேசத் தொடங்கினார். அவர் ஒரு வார்த்தை பேசி முடிப்பதற்குள் எழுந்த அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ ஆகியோர் ஆர்எஸ்எஸ் மீது எவ்வித ஆதாரமும் இல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர்.

மகாத்மா காந்தி கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று உச்ச நீதிமன்றமும், அதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்களும் தெளிவாக தீர்ப்பளித்துள்ளன. மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்ஸை தொடர்புபடுத்தி பேசிய பலரும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்ததும் அதற்காக மன்னிப்பு கேட்டு வழக்கை வாபஸ் பெற்றதை அமைச்சர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நூறாண்டுகளாக நாட்டுக்காக தன்னலமின்றி உழைத்து வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசபக்தியை, தியாகத்தை, சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுசரித்த கும்பலால் உணர முடியாது.

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் மீது அவதூறு பரப்பிய அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி மற்றும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ ஆகியோருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை அவர்கள் திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>வானதி சீனிவாசன்</p></div>
‘திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வந்தால்..?’ - செல்வப்பெருந்தகை பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in