“தலைமைச் செயலகமா, தவெக தலைமை அலுவலகமா?” - வானதி சீனிவாசன் காட்டம்

“தலைமைச் செயலகமா, தவெக தலைமை அலுவலகமா?” - வானதி சீனிவாசன் காட்டம்
Updated on
1 min read

சென்னை: “முதல்வர் விஜய்யை,தலைமைச் செயலகத்தில் சந்தித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூட்டணி பேரம் பேசியிருக்கிறார். தலைமைச் செயலகமா, தவெக தலைமை அலுவலகமா?” என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் ஒதுக்கியுள்ளது. இது அவர்களது விருப்பம். ஆனால், கூட்டணி கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

முதல்வர் விஜய்யை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூட்டணி பேரம் பேசியிருக்கிறார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதனால் சென்னை கோட்டையில் இருப்பது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமா அல்லது தவெக தலைமை அலுவலகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

“தலைமைச் செயலகமா, தவெக தலைமை அலுவலகமா?” - வானதி சீனிவாசன் காட்டம்
வானிலை முன்னறிவிப்பு: 14 மாவட்டங்களில் கனமழை, குமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in