‘தூய்மையான, ஊழலற்ற ஆட்சி நடத்துகிறார் விஜய்’ - மதுராந்தகத்தில் வைகோ பெருமிதம்

தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டம் மதுராந்த கத்தில் நேற்று நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: எம்.முத்துகணேஷ்

தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டம் மதுராந்த கத்தில் நேற்று நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: எம்.முத்துகணேஷ்

Updated on: 
1 min read

மதுராந்தகம்: தவெக வேட்​பாளர் மரகதம் குமர​வேலை ஆதரித்​து, மதச்சார்​பற்ற சமுகநீதி வெற்​றிக் கூட்​டணி சார்​பில் மது​ராந்​தகம் அருகே நேற்று பிரச்​சாரப் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில், மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர், விசிக தலை​வர் திரு​மாவளவன், அமைச்​சர்​கள் ஆனந்த், ஆதவ் அர்​ஜுனா, விஸ்​வ​நாதன், ஷாஜ​கான் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​தில் மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ பேசி​ய​தாவது: மது​ராந்​தகம் வாக்​காளர்​கள் ஆலோ​சித்து வாக்​களிக்க வேண்​டும். கடந்த சில நாட்​களாக பாஜக​வுடன், தவெக மறை​முக​மாக உறவாடு​வ​தாக சிலர் பேசுகின்​றனர். இந்​துத்​துவா, மதவாத சக்​தி​களை தமிழகத்​தில் அனு​ம​திக்க மாட்​டோம். இந்த ஆட்​சி​யில் பெண்​கள் பாது​காப்​புக்​காக சிங்​கப்​பெண் அதிரடிப்​படை தொடங்​கப்​பட்​டுள்​ளது. பள்ளி மாணவர்​களுக்​கான காலை உணவு திட்​டத்​துக்கு காம​ராஜர் பெயர் சூட்​டப்​பட்​டுள்​ளது. கல்​விச் சாலைகளுக்கு அருகே இருந்த டாஸ்​மாக் கடைகளை மூடிய​வர் முதல்​வர் விஜய். வெற்றி தமிழ்​நாடு என்ற பெயரில் 67,732 கோடிக்கு தொழில் முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளன.

3 மாதங்​களில் ஆட்சி முடி​யும் என சிலர் ஆரூடம் சொல்​கிறார்​கள். இப்​போது கூறுகிறேன், 2031-ம் ஆண்​டிலும் விஜய்​தான் ஆட்​சி​யில் இருப்​பார். தூய்​மை​யான, ஊழலற்ற ஆட்சி நடத்தி வரு​கிறார் முதல்​வர் விஜய். இவ்​வாறு அவர் பேசி​னார்.

திரு​மாவளவன் பேசும்​போது, “புதிய அத்​தி​யா​யம் தொடங்​கி​யிருக்​கிறது. எதிர்​கால அரசி​யலின் திசையை ஏற்​படுத்​தும் புதிய கூட்​டணி உரு​வாகி​யுள்​ளது. கடந்த காலத்​தில் திமுக​வுடன் இணைந்து நெடுங்​காலம் பயணித்​திரு​கிறோம். இப்​போது தவெக​ கூட்​ட​ணி​யில் இணைந்​திருப்​ப​தற்கு வரலாற்று நியா​யங்​களை மீண்டும், மீண்டும் நினை​வூட்ட வேண்​டிய பொறுப்பு எனக்கு இருக்​கிறது. தவெக​வின் கொள்கை ஆசான்​களில் ஒரு​வர் அம்​பேத்​கர், 2 பெண்​களை கொள்கை தலை​வர்​களாக ஏற்​று உள்ளனர்” என்​றார்​.

<div class="paragraphs"><p>தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டம் மதுராந்த கத்தில் நேற்று நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: எம்.முத்துகணேஷ்</p></div>
“அதிமுகவை ஏன் தொட்டோம் என முதல்வர் விஜய் கதறும் நாள் விரைவில் வரும்” - ஆர்.பி.உதயகுமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in