தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால் என்ன ஆகும்? - வைகோ விளக்கம்

வைகோ

வைகோ

Updated on
1 min read

தொகுதி மறு​வரையறை மசோதா நிறைவேறி​னால் தென்​மாநிலங்​கள் ஆதரவு இல்​லாமலேயே மத்​திய அரசை பாஜக அமைத்​துக் கொள்​ளும் என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரி​வித்​தார்.

ஈரோடு மாவட்​டம் மொடக்​குறிச்சி மதி​முக வேட்​பாளர் செந்​தில்​நாதனை ஆதரித்து அரச்​சலூரில் அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ பேசி​ய​தாவது: திரா​விட மாடல் ஆட்​சி​யில் ஸ்டா​லின் நிறைவேற்​றிய திட்​டத்​தைப் போல, வேறெந்த மாநிலத்​தி​லும் திட்​டங்​கள் நிறைவேற்​றப்​பட​வில்​லை.

தற்​போது 4 மடங்கு மக்​கள் தொகை உயர்ந்​து​விட்​ட​தாக​வும், தொகுதி மறு​வரையறைத் திட்​டம் செயல்​படுத்​தி​னால், மக்​கள் தொகை எண்​ணிக்கை அடிப்​படை​யில் 888 எம்​பிக்​கள் வரு​வார்​கள் என்​றும் மத்​திய அரசு சொல்​கிறது.

தொகுதி மறு​வரையறை மசோதா நிறைவேறி​னால் வடமாநிலங்​களில் 500-க்​கும் மேலான உறுப்​பினர்​களை பெற்​று, தென் மாநிலங்​கள், வடகிழக்கு மாநிலங்​கள் ஆதரவு இல்​லாமல் மத்​திய அரசை பாஜக அமைத்து கொள்ள முடி​யும்.

இது மத்​திய அரசின் பித்​தலாட்​டம். நல்​ல​வேளை​யாக மூன்​றில் இருபங்கு பெரும்​பான்மை இல்​லாமல், தொகுதி மறு​வரையறை மசோ​தாவை நிறைவேற்ற முடி​யாமல் போனது. தமிழ்​நாடு உரிமை​களை​யும், நலன்​களை​யும் காக்க ஸ்டா​லின் ஆட்சி நீடிக்க மக்​கள் உதயசூரியன் சின்​னத்​துக்கு வாக்​களிக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசினார்.

<div class="paragraphs"><p>வைகோ</p></div>
வெளிச்சத்துக்கு வந்த ஸ்டாலின்- ராகுல் சண்டை: பியூஷ் கோயல் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in