

ஆண்டிபட்டி எஸ்எஸ்.புரத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட வைகோ.
ஆண்டிபட்டி: ஸ்டெர்லைட் ஆலையை கொண்டுவர மத்திய அரசு முயன்றால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் போல இளைஞர்களும், பொதுமக்களும் எழுச்சியோடு போராட வேண்டும் என்று வைகோ தெரிவித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் நாகலாறு ஓடைப்பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது: கேரளாவைப் போன்று தமிழகத்திலும் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும்.
மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்புக்குரியது. ஆனால் அங்கு அணை கட்ட உதவுவதே மத்திய அரசுதான். மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பசுமை தாமிரம் உற்பத்தி என்ற பெயரில் மீண்டும் திறப்பதற்கும் மத்திய அரசு சதித் திட்டம் தீட்டி வருகிறது. எனவே இந்தி எதிர்ப்பு போல் தமிழக மக்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக எழுச்சியோடு போராடினால்தான் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.