வைகோ இன்று முதல் 2-ம் கட்ட பிரச்சாரம்

வைகோ இன்று முதல் 2-ம் கட்ட பிரச்சாரம்
Updated on
1 min read

சென்னை: மத​சார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து இன்று முதல் வைகோ 2ம் கட்ட தேர்​தல் பிரச்சாரம் மேற்​கொள்​கிறார்.

தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தலை முன்னிட்டு, மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ கடந்த 6-ம் தேதி முதல் மதி​முக மற்​றும் கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரு​கிறார்.

இந்​நிலை​யில், 2-ம் கட்​ட​மாக இன்று (13-ம் தேதி) முதல் வரும் 21-ம் தேதி வரை தின​மும் மாலை 4 முதல் இரவு 10 மணி வரை பிரச்​சா​ரம் மேற்​கொள்​ளவுள்​ளார்.

இன்று சிவகங்​கை, மதுரை வடக்​கு, மதுரை தெற்கு தொகு​தி​களி​லும், நாளை திருச்​செங்​கோடு, மொடக்​குறிச்​சி​யிலும், ஏப்​.15 மற்​றும் 17-ம் தேதி சீர்​காழி​யிலும், 16-ல் புளி​யங்​குடி, சங்​கரன்​கோ​வில், விருதுநகரிலும், 18 -ல் மொடக்​குறிச்​சி, 19-ல் திருநெல்​வேலி, பாளை​யங்​கோட்​டை, மேலப்​பாளை​யம் தொகு​தி​யிலும், 20-ம் தேதி சங்​கரன்​கோ​வில், மதுரை தெற்​கு, 21-ம் தேதி கடையநல்​லூர் தொகு​தி​யிலும் பிரச்​சா​ரம்​ மேற்​கொள்​கிறார்​.

வைகோ இன்று முதல் 2-ம் கட்ட பிரச்சாரம்
விஜய் காரை மறித்து தர்ணாவில் ஈடுபட்ட தூத்துக்குடி அஜிதா ஆக்னல் திமுகவில் ஐக்கியம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in