

நடைபெற இருக்கும் தேர்தல் அரசியல் குருஷேத்திர போர் இல்லை என்று வைகோ ருசிகரமாக விளக்கம் கொடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுக வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர், வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடைபெறவுள்ள தேர்தல் அரசியல் குரு ஷேத்திரப் போர் என கூறுகின்றனர், ஆனால் நான் அப்படி கருதவில்லை. சம பலம் கொண்ட பாண்டவர்களும், கவுரவர்களும் போரிட்டனர்.
ஆனால் இங்கே அதுபோல சம பலமானதாக போட்டி இல்லை. திமுக கூட்டணிதான் பலமாக இருக்கிறது. அந்த அளவுக்கு எதிர் அணி சம பலத்துடன் இல்லை. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக மட்டுமே 140 இடங்கள் வரை வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
நான் ஏப்.2ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். எங்கள் முதன்மை செயலாளர் மற்றும் நிர்வாகிகள் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பிரச்சாரம் செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.