சென்னை: 1.50 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை: 1.50 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி
Updated on: 
1 min read

சென்னை: சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: அனைத்து தெரு நாய்​களுக்​கும் வெறி நாய்க்​கடி நோய்த் தடுப்பூசி மற்​றும் அக, புற ஒட்​டுண்ணி மருந்து செலுத்​தும் முகாம்​கள் கடந்த ஆக. 11-ல் தொடங்​கப்​பட்​டன.

இதன் மூலம் திரு​வொற்​றியூர், மணலி, மாதவரம், தண்​டை​யார்​பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் அம்பத்​தூர், அண்​ணா நகர், தேனாம்​பேட்டை, கோடம்​பாக்​கம், ஆலந்​தூர், பெருங்குடி ஆகிய மண்​டலங்களில் தெருநாய்​களுக்​கு ரேபிஸ் தடுப்​பூசி மற்​றும் அக, புற ஒட்​டுண்ணி நீக்​கும் மருந்து செலுத்​தப்​பட்​டுள்ளது.

இதைத்​தொடர்ந்து தற்​போது, வளசர​வாக்​கம், அடை​யாறு, சோழிங்​கநல்​லூர் ஆகிய மண்​டலங்​களில் இம்​முகாம் நடை​பெற்று வரு​கிறது. இது​வரை, வளசர​வாக்​கம் மண்​டலத்​தில் 3,943, அடை​யாறு மண்​டலத்​தில் 3,985, சோழிங்​கநல்​லூர் மண்டலத்​தில் 4,153 தெருநாய்​களுக்​கு தடுப்​பூசி செலுத்​தப்​பட்​டுள்​ளது.

கடந்த ஆக.11 முதல் அக்.21 வரை நடை​பெற்ற சிறப்பு முகாம்​கள் மூலம் 1,50,303 தெரு நாய்​களுக்கு ரேபிஸ் தடுப்​பூசி மற்​றும் அக, புற ஒட்​டுண்ணி நீக்​கும் மருந்து செலுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை: 1.50 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி
மாண்புமிகுவின் ‘நெளிசு சுளிவு’ அணுகுமுறை | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in