இடைநிலை ஆசிரியர் காலி இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு

இடைநிலை ஆசிரியர் காலி இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு
Updated on: 
1 min read

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் எஸ்​.சேது​ராம வர்மா நேற்று வெளி​யிட்ட செய்திக்குறிப்பு:

இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்​பாக 2024-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்ட தற்​காலிக தெரிவு பட்​டியல்​களுக்கு காத்​திருப்​போர் பட்​டியல் கடந்த பிப்​.11-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் இணை​யதளத்​தில் (www.trb.tn.gov.in) வெளி​யிடப்​பட்​டது.

இதைத் தொடர்ந்​து, பணி​யில் சேராத மற்​றும் பணி​யில் சேர்ந்த பிறகு ராஜி​னாமா செய்த ஆசிரியர்​களின் விவரங்​கள் பெறப்​பட்​டன. அவர்​கள் தொடர்​புடைய அதே இன சுழற்​சி​யில் காத்​திருப்​போர் பட்​டியலில் உள்​ளவர்​கள் அந்த இடத்​துக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அந்த பட்​டியல் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அவர்​களுக்கு சம்​பந்​தப்​பட்ட துறை​யால் நியமன ஆணை வழங்​கப்​படும்.

இடைநிலை ஆசிரியர் காலி இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு
விஐடி சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் 2 புதிய கண்டுபிடிப்புகளுக்கு பிரதமர், முதல்வர் பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in