சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான ஊக்கத் தொகை: முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு அறிவிப்பு
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான ஊக்கத் தொகை: முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: சி​வில் சர்​வீஸ் முதல்​நிலைத் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்​கள், முதன்​மைத் தேர்​வுக்​கான ஊக்​கத்​தொகை ரூ.25 ஆயிரம் பெற இன்று (வெள்​ளி) முதல் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது : மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) நடத்​தும் குடிமைப் பணி தேர்​வில் தமிழகத்​தைச் சேர்ந்த இளைஞர்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கும் வகை​யில் யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வு ஊக்​கத்​தொகை திட்​டத்தை தமிழக அரசு செயல்​படுத்​துகிறது.

இத்​திட்​டத்​தின்​கீழ், 2026-ம் ஆண்டு யுபிஎஸ்சி குடிமைப்​பணி, இந்​திய வனப்​பணி முதன்​மைத் தேர்​வு​களுக்கு பயிற்சி மேற்​கொள்ள ஏது​வாக முதல்​நிலைத் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்​களுக்கு ரூ.25 ஆயிரம் நேரடி​யாக அவர்​களின் வங்​கிக் கணக்​கில் செலுத்​தப்​படும். இந்த ஊக்​கத்​தொகையை பெறு​வதற்கு இந்த ஆண்​டுகுடிமைப்​பணி, இந்​திய வனப்​பணி முதல்​நிலைத் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்​கள் ஆன்​லைன் மூலம் (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/) ஜூன் 19 முதல் 30-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான ஊக்கத் தொகை: முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்
“12 ஆண்டுகால பிரதமர் பணி என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம்!” - பாரிஸில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in