தேர்தலில் ‘விஜய்’ நமக்குத்தான்: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சுவாரஸ்யம்

மயிலாப்பூர் தொகுதியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு   மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். | படம்: எல். சீனிவாசன் |

மயிலாப்பூர் தொகுதியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். | படம்: எல். சீனிவாசன் |

Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தலில் ‘விஜய்’ நமக்​குத்​தான், வெற்​றியை குறிப்​பிடு​கிறேன், நடிகரை அல்ல என மத்​திய அமைச்​சர் பியூஸ் கோயல் தெரி​வித்​தார். தமிழக பாஜக சார்​பில் மயி​லாப்​பூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் பாஜக செயல்​வீரர்​கள் கூட்​டம் மற்​றும் வேட்​பாளர் அறி​முக கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில் மயி​லாப்​பூர் பாஜக வேட்​பாளர் தமிழிசை சவுந்​தர​ராஜன், மேலிட பொறுப்​பாள​ரும், மத்​திய அமைச்​சரு​மான பியூஸ் கோயல், அதி​முக, அமமுக, பாமக, தமாகா உள்​ளிட்ட கூட்​டணி கட்சி நிர்​வாகி​களும் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​தில் பியூஸ் கோயல் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் நாம் எதிர்​கொள்​ளும் இந்த தேர்​தல் சாதாரண தேர்​தல் அல்ல. இது தமிழகத்​தின் விதி​யை, தமிழ் பண்​பாட்டை மற்​றும் நமது குழந்​தைகளின் எதிர்​காலத்தை தீர்​மானிக்​கப்​போகும் தேர்​தல்.

தமிழகம் செழிக்க வேண்​டும், ஒவ்​வொரு மனிதனின் நலனும் பாது​காக்​கப்பட வேண்​டும் என்ற ஒரே நோக்​கத்​துக்​காக தேசிய ஜனநாயக கூட்​டணி இணைந்து செயல்​படு​கிறது.

டெல்​லி​யில் ஒரு இ்ன்​ஜின் (மத்​திய அரசு), சென்​னை​யில் ஒரு இன்​ஜின் (மாநில அரசு) என ‘இரட்டை இன்​ஜின்’ அரசு அமைந்​தால், தமிழகத்​தின் வளர்ச்சி இரட்​டிப்பு வேகத்​தில் இருக்​கும். பிரதமர் மோடி​யின் திட்​டங்​கள் தமிழக மக்​களை முழு​மை​யாக சென்​றடை​யும்.

நாம் அனை​வரும் ஜெயலலி​தாவுக்கு கடமைப்​பட்​டுள்​ளோம். 2021-ல் நடந்த தவறு மீண்​டும் நடக்​கக்​கூ​டாது. திமுக ஆட்​சி​யில் ஏழை எளிய மக்​கள், ஆசிரியர்​கள் மற்​றும் அரசு ஊழியர்​கள் சொல்​லொண்​ணாத் துயரங்​களைச் சந்​தித்து வரு​கின்​றனர்.

கடந்த 5 ஆண்​டு​களில் தமிழகம் மிக மோச​மான ஊழலை சந்​தித்​துள்​ளது. பொருளா​தா​ரம் சீர்​குலைந்​து, சட்​டம் ஒழுங்கு சிதைந்​து​விட்​டது. பழனி​சாமி தலை​மையி​லான நல்​லாட்சி அமைய வேண்​டியது அவசி​யம்.

உதயநிதி ஸ்டா​லின், ஒரு​போதும் தமிழ் பண்​பாட்​டையோ, மக்​களின் உணர்​வு​களையோ மதிக்​கத் தெரி​யாதவர். அவர் முதல்​வ​ரா​னால் அது தமிழகத்​துக்கு பெரும் பாதிப்பை ஏற்​படுத்​தும். தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிக்கு வந்​தவுடன், சென்​னை​யில் உள்ள அனைத்து குடிசைப் பகு​தி​களை​யும் மாற்​றி, அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் மற்​றும் தரமான வீடு​கள் கட்​டித் தரப்​படும்.

நாம் அனை​வரும் ஒரு குழு​வாக செயல்​பட்​டால், இந்​தத் தேர்​தலில் 200 இடங்​களுக்கு மேல் வெற்றி பெற்று வலு​வான ஆட்​சியை அமைப்​போம். மக்​கள் நடிகர்​களைப் பார்க்க வரு​வார்​கள், கைகாட்​டு​வார்​கள். ஆனால் அவர்​கள் ஓட்​டுப் போட மாட்​டார்​கள்.

இதற்கு முன்பு கமல்​ஹாசன் வந்​த​போது அவருக்கு எத்​தனை சதவீத ஓட்டு கிடைத்​தது? எனவே, நடிகர்​களைப் பார்த்து மக்​கள் ஏமாற மாட்​டார்​கள். ‘விஜய் நம்​முடையது’. நடிகர் விஜய்யை சொல்​ல​வில்​லை. வெற்​றியை சொல்​கிறேன், விஜ​யத்தை சொல்​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில் தமிழிசை சவுந்​தர​ராஜன் பேசும்​போது, ''2026-ல் இரட்டை இலை​யோடு தாமரை மலரும். இரட்டை இலை ஆட்சி அமைக்​கும். தமிழகத்​தில் பழனி​சாமி ஆட்சி அமைக்​கும்​போது, பிரதமர் மோடியை அழைத்து சட்​டப்​பேர​வை​யில் செங்​கோலை நிறு​வு​வோம்​'' என்றார்.

<div class="paragraphs"><p>மயிலாப்பூர் தொகுதியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு   மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். | படம்: <em>எல். சீனிவாசன்</em> |</p></div>
2025-26-ம் நிதியாண்டில் 3,405 பெட்டிகளை தயாரித்து சென்னை ஐசிஎஃப் சாதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in