உறவினர் மறைவு: நிலக்கோட்டையில் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Updated on: 
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உயிரிழந்த தனது உறவினர் குடும்பத்தினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

​திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறவினர் பாலசுப்பிரமணியன். இவர், கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சியிலிருந்து கார் மூலம் மார்க்கமாக நிலக்கோட்டைக்கு வருகை தந்தார்.

நிலக்கோட்டையில் ​சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உறவினர் இல்லத்தில் இருந்த அவர், குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார். மத்திய அமைச்சரின் வருகையை ஒட்டி நிலக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாஜக நிர்வாகிகள் பலர் வீட்டின் வெளியே அமைச்சரை சந்திக்க காத்திருந்தனர்.

இது முற்றிலும் குடும்பம் சார்ந்த தனிப்பட்ட நிகழ்வு என்பதால், அவர் கட்சி நிர்வாகிகளை யாரையும் சந்திக்கவில்லை. செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை. தொடர்ந்து, நிலக்கோட்டையிலிருந்து காரில் மதுரை விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

உறவினர் மறைவு: நிலக்கோட்டையில் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
“நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே கைது நடவடிக்கை” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in