சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தமிழக ஆளுநர் அர்லேகரிடம் அறிக்கை கேட்டது மத்திய அரசு

தமிழக ஆளுநர் அர்லேகர்

தமிழக ஆளுநர் அர்லேகர்

Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தின் சட்​டம் ஒழுங்கு நில​வரம் குறித்து மதிப்​பீடு செய்து அறிக்கை சமர்ப்​பிக்க ஆளுநர் அர்​லேகரை மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்​டுக் கொண்​டுள்​ளது.

தமிழகத்​தில் தீபாவளி பண்​டிகை யன்று ஒரே நாளில் 13 கொலைகள் நடை​பெற்​றன. தலைநகர் சென்​னை​யில் நேற்று முன்​தினம் மட்​டும் 3 பேர் கொல்​லப்​பட்​டனர். தொடர் குற்​றச் சம்பவங்​களால் ஆளும் தவெக அரசை, திமுக, அதிமுக உள்​ளிட்ட பல்​வேறு எதிர்க்​கட்​சிகள் விமர்​சித்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில் மாநிலத்​தின் சட்​டம் ஒழுங்கு நில​வரம் குறித்து, உயரதி​காரி​களு​டன் முதல்​வர் விஜய் சென்​னை​யில் நேற்று முன்தினம் ஆலோ​சனை நடத்தி பல்​வேறு அறி​வுறுத்​தல்​களை வழங்​கினார். அதன் அடிப்​படை​யில் மாநிலம் முழு​வதும் சோதனை நடத்தி நூற்​றுக்​கணக்​கான ரவுடிகளை போலீ​ஸார் கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

2-ம் நாளாக ஆலோசனை

இந்​நிலை​யில், சட்​டம் ஒழுங்கு தொடர்​பாக முதல்​வர் விஜய் 2-வது நாளாக தலை​மைச் செயல​கத்​தில் நேற்று காவல் துறை உயரதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தினார். இந்​தக் கூட்​டத்​தில் தலை​மைச் செயலர் எம்.சாய்​குமார், டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால், உளவுப் பிரிவு ஐஜி அஸ்ரா கார்க் மற்​றும் துறை சார்ந்த அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

அப்​போது மாநிலத்​தின் தற்​போதைய சட்​டம் ஒழுங்கு நில​வரம், சமீபத்​தில் நடை​பெற்ற குற்​றச்​சம்​பவங்​கள் குறித்த விசா​ரணை​யின் நிலை, அரசி​யல் அழுத்​தங்​களால் கிடப்​பில் போடப்​பட்ட வழக்​கு​கள், தொடர் குற்​றங்​

களைத் தடுப்​ப​தற்​கான அடுத்​தகட்ட நட​வடிக்​கைகள் உட்​பட பல்​வேறு விவகாரங்​கள் தொடர்​பாக விவாதிக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. போதைப் பொருட்​கள் தடுப்பு பணிகளைத் தீவிரப்​படுத்​தவும் முதல்​வர் விஜய், காவல் துறை அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​ய​தாக தெரி​கிறது.

இதற்​கிடை​யில், மாநிலத்​தின் சட்​டம் ஒழுங்கு நில​வரம் குறித்து மாதந்​தோறும் மத்​திய உள்​துறை அமைச்​சகத்​துக்கு ஆளுநர் தரப்​பில் அறிக்கை சமர்ப்​பிப்​பது வழக்​கம். மாநிலத்​தின் டிஜிபி மூலமாக தேவை​யான விவரங்​களைச் சேகரித்து ஆளுநர் இந்த அறிக்​கையை மத்​திய அரசுக்கு அனுப்​புவார். தவிர மத்​திய உளவுப் பிரிவும் உள்​துறைக்கு தனியாக அறிக்கை அளிக்​கும்.

இந்​நிலை​யில் தமிழகத்​தின் சட்​டம் ஒழுங்கு நில​வரம் குறித்து விரிவான அறிக்​கையைச் சமர்ப்​பிக்க தமிழக ஆளுநர் அர்​லேகரிடம் மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்​டுள்​ள​தாகத் தற்​போது தகவல்​கள் வெளியாகி உள்​ளன. அதில், சமீப காலமாக தமிழகத்​தில் நிகழ்ந்​துள்ள வன்​முறை சம்​பவங்​கள், மாநில அரசு எடுத்​துள்ள நட​வடிக்​கைகள் குறித்து மதிப்​பீடு செய்து அறிக்கை வழங்​குமாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>தமிழக ஆளுநர் அர்லேகர்</p></div>
‘எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்’ - மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு விஜய் எச்சரிக்கை

X