‘எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்’ - மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு விஜய் எச்சரிக்கை

‘எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்’ - மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு விஜய் எச்சரிக்கை
Updated on: 
2 min read

சென்னை: “உங்​கள் பொறுப்பை உணர்ந்து செயல்​படுங்​கள். எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்” என்று தவெக எம்​எல்ஏ.க்களுக்கு முதல்​வர் விஜய் எச்​சரிக்கை விடுத்​து உள்​ளார்.

தவெக ஆட்சி அமைத்து 6 மாதங்​கள் நிறைவடைந்​துள்​ளன. கடந்த மே 13-ம் தேதி சட்​டப்​பேரவை​யில் வாக்​கெடுப்​பின் மூலம் காங்​கிரஸ், விசிக, கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் ஆதரவுடன் தவெக பெரும்​பான்​மையை நிரூபித்​தது. இந்​நிலை​யில் கடந்த சில மாதங்​களாகத் தமிழகத்​தில் நில​வும் சட்​டம் ஒழுங்கு பிரச்​சினை, மின்​வெட்டு, விலை​வாசி உயர்வு போன்ற பிரச்​சினைகள் ஆட்​சிக்​குச் சவாலாக இருந்து வரு​கின்​றன.

இவை ஒருபுறமிருக்க அமைச்​சர்​கள், தவெக எம்​எல்​ஏக்​களின் நட​வடிக்​கை​யால் பல்​வேறு விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன. குறிப்​பாக, சட்​டப்​பேரவைத் துணைத் தலை​வர் ரவிசங்​கர், மனு அளிக்க வந்த நபரை தாக்​கியது, கள்​ளக்​குறிச்சி எம்​எல்ஏ அருள் விக்​னேஷ், மாவட்ட ஆட்​சி​யருக்கு அனுப்​பிய ஆபாச எஸ்எம்​எஸ் உள்​ளிட்ட விவகாரங்​கள் தமிழக அரசி​யலில் பரபரப்பை ஏற்​படுத்​தின. இந்த விவகாரங்​களில் தமிழக அரசுக்கு எதிராகவும், தவெக தலை​மைக்கு எதிராகவும் பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்து வரு​கின்​றனர். அத்​துடன் தவெக கூட்​டணி கட்​சி​யினரும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய் தலை​மையில் நேற்று மாமல்​லபுரத்​தில் உள்ள தனியார் சொகுசு விடுதி​யில் எம்​எல்​ஏக்​கள் ஆலோ​சனை கூட்​டம் மாலை 4.10 மணிக்கு நடை​பெற்​றது. அமைச்​சர்​கள் ஆனந்த், ஆதவ் அர்​ஜுனா, செங்​கோட்​டையன், நிர்​மல் குமார் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர். கூட்​டத்​தில் பங்​கேற்ற எம்​எல்​ஏக்​கள் செல்​போன் எடுத்து செல்ல அனுமதிக்​கப்​பட​வில்லை. அதேபோல், எம்​எல்​ஏக்​களின் உதவியாளர்​களும் உள்ளே செல்ல அனுமதிக்​கப்​பட​வில்லை. அவர்​கள் விடுதி​யின் வாயிற்​கதவு அருகே இறக்​கி​விடப்​பட்​டனர்.

ஆலோ​சனைக் கூட்​டத்​தில் முதல் கட்​ட​மாகப் பெண் எம்​எல்​ஏக்​களை அழைத்த முதல்​வர் விஜய், தொகுதி மேம்​பட கடந்த 6 மாதங்​களில் செய்த நட​வடிக்​கைகள் என்ன, மேற்​கொள்​ளப்​படும் பணிகள் என்​னென்ன போன்ற விவரங்​களைக் கேட்​டறிந்​தார். பின்​னர், தொகுதி​களில் நடை​பெறும் பணிகள் குறித்த அறிக்​கையை எம்​எல்​ஏக்​கள் சமர்ப்​பித்​தனர். அதன்​பின் அவர்​கள் உடனடி​யாக அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இரண்​டாவது கட்​ட​மாக மற்ற எம்​எல்​ஏக்​களில் ஒரு பகுதி​யினரை தனித்​தனியாக அழைத்து முதல்​வர் பேசிய​தாகவும் அப்​போது வேறு யாரும் உள்ளே அனுமதிக்​கப்​பட​வில்லை என்​றும் தகவல்​கள் வெளியாகி உள்​ளன. இந்​தச் சந்​திப்​பு​களின் போது எம்​எல்​ஏக்​கள் பலர் தொகுதி​களில் நலத்​திட்​டங்​களை செயல்​படுத்​து​வதில் அதி​காரி​களின் ஒத்​துழைப்பு இல்லை என புகார் தெரி​வித்​துள்​ளனர். மேலும், கிடப்​பில் உள்ள பணிகளைக் கூட முடிக்க முடி​யாமல் சுணக்​கம் ஏற்​படுவ​தாக எம்​எல்​ஏக்​கள் கூற, அவற்றை எல்​லாம் முதல்​வர் குறித்து வைத்​துக் கொண்​டார்.

பின்​னர், “என்​னைச் சந்​திக்க யாராவது உங்​களைத் தடுக்​கிறார்​களா? தொகுதி சார்ந்த எந்​தப் பிரச்​சினை என்​றாலும் என்னை எப்​போது வேண்டு​மென்​றாலும் அணுகலாம். நீங்​கள் தொகுதி​யில் செய்​யக் கூடிய பணிகள்​தான் அடுத்த முறை உங்​களை வேட்​பாளராக நிற்க வைக்​கும்” என்று எம்​எல்ஏ.க்களிடம் முதல்​வர் கூறி அனுப்பி உள்​ளார்.

மூன்​றாவது கட்​ட​மாகச் சர்ச்​சைக்​குரிய வகை​யில் விமர்​சனத்​துக்கு உள்​ளான 30-க்​கும் மேற்​பட்ட எம்​எல்​ஏக்​களிடம் முதல்​வர் விஜய் தீவிர விசா​ரணை செய்​துள்​ளார். அப்​போது, “பொது மக்​கள் மத்​தி​யில் நமக்கு இருக்​கும் நல்ல பெயரைக் கெடுத்​துக் கொள்​ளக் கூடாது. அவர்​களுக்​குச் சேவை செய்​ய​தான் நாம் வந்​திருக்​கிறோம். பொது இடங்​களில் நாகரீக​மாக நடந்து கொள்ள வேண்​டும். கட்​சிக்​குக் கெட்ட பெயர் வரும் வகை​யில் நடந்து கொள்​ளக் கூடாது. நீங்​கள், உங்​கள் பொறுப்பை உணர்ந்து செயல்​பட வேண்​டும். உங்​கள் மீது புகார் வந்​தால், யார் தவறு செய்​தா​லும் நிச்​சயம் அவர்​கள் மீது கடும் நட​வடிக்கை எடுப்​பேன். தேவையற்ற சர்ச்​சையில் சிக்​காதீர்​கள்” என்று விஜய் எச்​சரித்​துள்​ளார்.

அத்​துடன், மக்​கள் நலத் திட்​டங்​களைச் செயல்​படுத்​து​வதில் கவனம் செலுத்​துங்​கள். சட்​டம் ஒழுங்கு பிரச்​சினை​யில் காவல் துறைக்கு முழு சுதந்​திரம் அளித்​துள்​ளேன். மேலும், குதிரை பேரம் என்ற பெயரில் எதிர்க்​கட்​சிகள் விரிக்​கும் சதி வலை​யில் சிக்கி விடாதீர்​கள். ஆட்​சி​யைக் கவிழ்க்க நினைப்​போரின் முயற்​சிகளுக்கு வழி வகுக்க வேண்​டாம். மக்​கள் பணிதான் நமக்கு முக்​கியம். நமக்கு எதிராக அதிக கருத்​துகள் இருப்​ப​தாக யாரும் தொய்​வடைய வேண்​டாம். உள்​ளாட்சி தேர்​தல் மற்​றும் இடைத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. எனவே, கட்சிப் பணி​யையும், மக்​கள் பணி​யையும் கவனத்​தில் கொள்​ளுங்​கள் என்று எம்​எல்ஏ.க்களுக்கு விஜய் அறி​வுரை வழங்கி உள்​ளார்.

அதேபோல், அரசு மீது எதிர்க்​கட்​சிகள் நம்​பிக்கை இல்லா தீர்​மானம் கொண்டு வந்​தால் அதை எவ்​வாறு எதிர்​கொள்​வது என்​பது குறித்​தும் கூட்​டத்​தில் விவாதிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

சரியாக 2 மணி நேரம் 48 நிமிடங்​கள் இந்த கூட்​டத்தை நடத்தி முடித்த பின்​னர் முதல்​வர் விஜய், 6.38 மணி​யளவில் அங்​கிருந்து புறப்​பட்​டார். முதல்​வர் தலை​மையில் நடந்த இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் 105 எம்​எல்​ஏக்​கள் பங்​கேற்​றனர். இதில் பேரவைத் தலை​வர் என்ற முறை​யில் ஜே.சி.டி.பிர​பாகரும், குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன் தூத்​துக்​குடி வருகையையொட்டி அமைச்​சர் நாத்​தும், மெக்கா சென்ற காரணத்​தால் எம்​எல்ஏ முஸ்த​பாவும், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறு​வ​தால் வி.எஸ்.பாபு ஆகிய 4 பேரும் பங்​கேற்​க​வில்லை.

அத்​துடன், ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பங்​கேற்ற ஆண் எம்​எல்​ஏக்​களுக்கு பட்டு வேட்டி மற்​றும் சட்​டையும், பெண் எம்​எல்​ஏக்​களுக்​குப் பட்​டுப்​புட​வையும் முதல்​வர் விஜய் தீபாவளி பரிசாக வழங்​கி​யுள்​ளார்.

இந்த கூட்​டம் நடை​பெறு​வதற்கு முன்​னதாக 10 அமைச்​சர்​கள் மற்​றும் 30-க்​கும் மேற்​பட்ட எம்​எல்​ஏக்​கள் சென்னை பசுமை வழிச்​சாலை​யில் உள்ள அமைச்​சர் ஆனந்த் இல்​லத்​தில் சுமார் ஒரு மணி நேரம் ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது

‘எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்’ - மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு விஜய் எச்சரிக்கை
“இறைவன் அனைவருக்கும் உரியவர்” - அயோத்தி பயணம் குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து

X