தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் வலியுறுத்தல்
Updated on
1 min read

மதுரை: தாய் மொழி​யில் பயிற்​று​விப்​பதை ஊக்​குவிக்​கும் வகை​யில் தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்த வேண்​டும் என்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கூறி​னார்.

ராமேசுவரத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற காசி தமிழ் சங்​கமம் நிறைவு விழா​வில் பங்​கேற்ற பின்​னர் நேற்று மதுரை வந்த அவர், மீனாட்சி அம்​மன் கோயி​லில் குடும்​பத்​தினருடன் சுவாமி தரிசனம் செய்​தார். கோயில் நிர்​வாகம் சார்​பில் மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானுக்கு மரி​யாதை செய்​யப்​பட்​டது. பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தேசிய கல்விக் கொள்​கை​யானது 5-ம் வகுப்பு வரை மாநிலங்​களின் தாய் மொழி​யிலேயே பயிற்​று​விக்க வேண்​டும் என வலி​யுறுத்​துகிறது. தமிழகத்​தி​லும் 5-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழி​யாக இருக்க வேண்​டும் என்று பரிந்​துரைப்​ப​தால், தமிழக அரசு தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்த வேண்​டும்.

தேசிய கல்விக் கொள்கை என்​பது மத்​திய அரசுக்​கும், தமிழகத்​தில் உள்ள திமுக அரசுக்​கும் இடையே சர்ச்​சைக்​குரிய விஷய​மாக இருந்து வரு​கிறது. தமிழகத்​தில் 5-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழி​யாக இருக்க வேண்​டும் என்​பது​தான் தேசிய கல்விக் கொள்​கை​யின் பரிந்​துரை. இதை ஏற்​று, திமுக அரசு தமிழ் மொழியை ஊக்​குவிக்​கும் என்று நம்​பு​கிறேன்.

மும்​மொழிக் கொள்​கை​யின் கீழ் இந்தி திணிக்​கப்​படு​வ​தாகக் கூறி, தமிழக அரசு தேசிய கல்விக் கொள்​கையை எதிர்த்து வரு​கிறது. மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்​கையை எதிர்க்​கும் வகை​யில், தமிழக அரசு இரு மொழிக் கொள்​கை​யாக மாநிலக் கல்விக் கொள்​கையை வெளி​யிட்​டது. மத்​திய அரசுக்​கும், மாநில அரசுக்​கும் இடையே​யான இந்த மோதல், உச்ச நீதி​மன்​றத்​தை​யும் எட்​டி​யுள்​ளது.

நவேதயா பள்ளிகள்… டிச. 15-ல் உச்ச நீதி​மன்​றம் தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களை அமைப்​பது தொடர்​பான விவ​காரத்​தில் மத்​திய அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​மாறு தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டது. பள்​ளி​கள் அமைப்​ப​தற்​குத் தேவை​யான நிலத்தை ஒதுக்​கீடு செய்​யு​மாறும் உத்​தர​விட்​டது.

கலை, பண்​பாடு, கலாச்​சா​ரத்​துக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் பிரதமர் மோடி​யின் ஆலோ​சனைப்​படி காசி தமிழ் சங்​கமம் 4.0 விழாவை வெற்​றிகர​மாக நடத்தி முடித்​துள்​ளோம். இது காசிக்​கும், ராமேசுவரத்​துக்​கும் இடையி​லான நாகரி​கப் பிணைப்​பாகும். எதிர்​காலத்​தில், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ அமைய​வும் வழி​வகுக்​கும்.

திருப்​பரங்​குன்​றம் மலை மீது தீபம் ஏற்​றலாம் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும், தமிழக அரசு அரசி​யல் காழ்ப்​புணர்​வோடு செயல்​படு​கிறது.

இந்​துக்​கள் புனித​மாகக் கருதும் திருப்​பரங்​குன்​றம் மலை மீது தீபம் ஏற்​று​வதை தடுப்​பவர்​களுக்கு சிவபெரு​மான் பாடம் புகட்​டு​வார். திருப்​பரங்​குன்​றம் மலை மீது தீபம் ஏற்​று​வதை யாராலும் தடுக்க முடி​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

தொடர்ந்​து, மதுரை கூடலழகர் பெரு​மாள் கோயில், அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயி​லில் மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் சுவாமி தரிசனம் செய்​தார்.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் வலியுறுத்தல்
வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in