வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை

பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை
Updated on
1 min read

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் புத்​தாண்​டையொட்டி நேற்று நள்​ளிரவு நடை​பெற்ற பிரார்த்​தனை​யில் பல்​லா​யிரக்​கணக்​கான கிறிஸ்​தவர்​கள் பங்​கேற்​றனர்.

நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யம் உள்​ளது. இங்கு புத்​தாண்டை முன்​னிட்டு நேற்று இரவு சிறப்​புப் பிரார்த்​தனை நடை​பெற்​றது. இதற்​காக விண்​மீன் ஆலயத்​தில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. இரவு 10.45 மணி​யில் இருந்து 11.45 மணி வரை பேராலய அதிபர் இருதய​ராஜ் தலை​மை​யில் மறை​யுரை நடத்​தப்​பட்​டது.

2026-ம் ஆண்டை வரவேற்​கும் வகை​யில் இரவு 11.45 மணிக்கு தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் தலை​மை​யில் 10-க்​கும் மேற்​பட்ட அருட்​தந்​தைகள் பங்​கேற்ற சிறப்பு பாடல் திருப்​பலி நடை​பெற்​றது. நள்​ளிரவு 12 மணிக்கு தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் குத்​து​விளக்​கேற்றி புத்​தாண்டை வரவேற்​று, அனை​வருக்​கும் வாழ்த்​துகளைத் தெரி​வித்​தார்.

புத்​தாண்​டைக் கொண்​டாடு​வதற்​காக நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து பல்​லா​யிரக்​கணக்​காணோர் வேளாங்​கண்​ணி​யில் குவிந்​திருந்​தனர். பேரால​யம் மற்​றும் மாவட்ட நிர்​வாகம் சார்​பில் அடிப்​படை வசதி​கள் செய்​யப்​பட்டு இருந்​தன. மாவட்ட காவல் துறை சார்​பில் விரி​வான பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன.

வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை
சென்னை​யில் களைகட்டிய புத்​தாண்டு கொண்​டாட்டம்: கண்காணிப்பு பணியில் 19 ஆயிரம் போலீ​ஸார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in