“பணம் பார்க்கும் நோக்கில் காஸ் ஏஜென்சிகள்...” - புதுச்சேரி பாஜக தலைவர் குற்றச்சாட்டு

“பணம் பார்க்கும் நோக்கில் காஸ் ஏஜென்சிகள்...” - புதுச்சேரி பாஜக தலைவர் குற்றச்சாட்டு
Updated on
2 min read

புதுச்சேரி: “பணம் பார்ப்பதற்காக, தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி பீதியை ஏற்படுத்துகின்றன. தவறு செய்யும் காஸ் ஏஜென்சிகளின் உரிமம் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.பி. ராமலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனையாக 63 ஆயிரம் சிவப்பு அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க துணைநிலை ஆளுரின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆஷா பணியாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் உயர்த்தி வழங்குவதற்கான கோப்பும் கையெழுத்தாகிவிட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை, ஷூ, உதவித்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1,000 உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.536 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கி ஆணை வெளியிட்டுள்ளது. காரைக்கால் என்ஐடி-க்காக ரூ. 530 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக 30 தொகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரத்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனைகளை மக்களிடம் நேரடியாக எடுத்துரைக்கும் வகையில், இதுவரை 550-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி உள்ளோம். மேலும் 500-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுமட்டுமின்றி சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, சாப்ட்வேர் நிறுவனம் தொடங்குவதற்காக மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன் மூலம் புதுச்சேரி மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தின்படி, 2024-25-ம் ஆண்டு அதில் திருத்தம் செய்யப்பட்டு மறு சீரமைக்கப்பட்டது. இந்த திருத்தத்தின் மூலம் மாநிலம் மற்றும் மத்திய வக்பு வாரிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான விதிமுறைகள் தெளிவாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் வக்பு சொத்துக்களை சரியான முறையில் பராமரிப்பதும், அவற்றில் இருந்து வரும் வருவாய் தவறாக பயன்படுத்தப்படாமல்,இஸ்லாமிய மக்களுக்கு நியாயமக சென்றடையும் நோக்கத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதுபற்றி எம்.பி என்ற முறையில் வைத்திலிங்கம் இஸ்லாமியர்களுக்கு சரியான விளக்கத்தை கொடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து செல்வகணபதி எம்.பி அதில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சொல்லாமல், ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் ஒருவர் வந்துள்ளார் என்று கூறுகிறார். சக எம்.பியை மதிக்க வேண்டும்,

உண்மையான தகவலை சமுதாயத்துக்கு சொல்ல வேண்டும் என்ற பொறுப்பில்லாமல் வைத்திலிங்கம் நடந்திருப்பது வருத்தத்துக்கு உரியது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வைத்திலிங்கம் மக்களிடம் சொல்லாமல், குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையை செய்கிறார். இஸ்லாமியர்களின் 15 சதவீத வாக்கை வைத்து காங்கிரஸ் எப்போதும் பயணப்படும். அதைத்தான் அவர் செய்திருக்கின்றார். இதை மக்கள் இனம் கண்டு புரிந்துகொள்ள வேண்டும்.

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு சிறிய அளவில் இருக்கும்போதே பிரதமர் அதை சரிசெய்யும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார். ஆனால் காஸ் நிறுவனங்கள் இதை பணம் பார்ப்பதற்காக, தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி பீதியை ஏற்படுத்துகின்றன. இடையூறை ஏற்படுத்தி பணம் அதிகமாக பார்க்கும் நோக்கில் செயல்பட்டால் மத்திய அரசிடம் தெரிவிப்போம். தவறு செய்யும் காஸ் ஏஜென்சிகளின் உரிமம் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.

காஸ் ஏஜென்சிகள், சிலிண்டர்களை கள்ள மார்க்கெட்டில் விற்கக்கூடாது . சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

“பணம் பார்க்கும் நோக்கில் காஸ் ஏஜென்சிகள்...” - புதுச்சேரி பாஜக தலைவர் குற்றச்சாட்டு
ஈரான் போர் தாக்கம்: இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in