கன்னிமாரா பொது நூலகம் ரூ.4.58 கோடியில் புதுப்பிப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

கன்னிமாரா பொது நூலகம் ரூ.4.58 கோடியில் புதுப்பிப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
Updated on
1 min read

சென்னை: ரூ.4.58 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட கன்​னி​மாரா நூல​கத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

தமிழகத்​தின் முதல் பொது நூல​க​மான கன்​னி​மாரா பொது நூலகம், 1896-ம் ஆண்டு டிச. 5-ம் தேதி சென்னை எழும்​பூரில் தொடங்​கப்​பட்​டது.

தற்​போது, 130-வது ஆண்டை எட்​டி​யுள்ள, இந்த நூலகம் புத்தக ஆர்​வலர்​கள், ஆய்​வாளர்​கள், போட்​டித் தேர்வு மாணவர்​களுக்​கும் பயனுள்​ள​தாக திகழ்​கிறது. இங்கு 9.5 லட்​சம் நூல்​களும், 1.5 லட்​சம் உறுப்​பினர்​களும் உள்​ளனர்.

இங்கு 1553-ம் ஆண்டு வெளி​யான நூல் முதல் மிக​வும் பழமை​யான நூல்​கள் பாது​காக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், கன்​னி​மாரா பொது நூலகம் ரூ.4.58 கோடி​யில் நவீன சிறு​வர் நூலகம், அறி​வியல் மையம், நவீன மாநாட்டு கூடம் உட்பட பல்​வேறு வசதி​களு​டன் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

இதே​போல், சிந்​தா​திரிப்​பேட்​டை​யில் நூற்​றாண்டு விழா காணும் (1926-2026) கோஷன் நூலகம் பாரம்​பரிய முறை​யில் ரூ.2.36 கோடி​யில் புனரமைக்​கப்​பட்​டுள்​ளது.

இவ்றை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்து பார்​வை​யிட்​டார். இந்தநிகழ்​வு​களில், அமைச்​சர்​கள் பி.கே.சேகர்​பாபு, அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன், இயக்​குநர் ச.கண்​ணப்​பன், பொது நூல​கத்​துறை இயக்​குநர் ச.ஜெயந்​தி, தொடக்​கக்​கல்​வி இயக்​குநர்​ பூ.ஆ.நரேஷ் பங்​கேற்​றனர்​.

கன்னிமாரா பொது நூலகம் ரூ.4.58 கோடியில் புதுப்பிப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
அரசு ஊழியர்கள் ஏமாந்து விடாதீர்கள்: அன்புமணி எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in