அதிமுக போர்வையில் நுழைய முயற்சிக்கும் பாஜக: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சா.மு.நாசரை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சா.மு.நாசரை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Updated on
1 min read

ஆவடி: அதிமுக என்ற போர்​வை​யின் மூலம் மீண்​டும் தமிழகத்​தினுள் நுழைய முயற்​சிக்​கிறது பாஜக என, ஆவடி​யில் நேற்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் ஆவடி சட்​டப்​பேரவை தொகு​தி​யில் திமுக வேட்​பாள​ராக அமைச்​சர் சா.​மு.​நாசர் போட்​டி​யிடு​கிறார். அவரை ஆதரித்​து, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று ஆவடி மாநக​ராட்சி அலு​வல​கம் அருகே பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: திமுக இளைஞரணி தொடங்​கப்​பட்ட காலத்​தில், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு உற்​றத் துணை​யாக இருந்​தவர் சா.​மு.​நாசர்.

திமுக முதன் முதலாக வெற்றி பெற்ற 1967 தேர்​தலின் போது, பள்ளி மாணவ​னாக வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்​னத்​துக்கு வாக்கு சேகரித்​தவர் சா.​மு.​நாசர். அப்​படிப்​பட்ட பெருமை வாய்ந்த சா.​மு.​நாசருக்​கு, தேர்​தலில் உதயசூரியன் சின்​னத்​தில் வாக்​களிக்க வேண்​டும்.

கட்சி பணி மட்​டுமல்​லாமல், 25 ஆண்டு காலம் பல்​வேறு பொறுப்​பு​களில் இருந்து மக்​கள் பணி​யாற்றி வரும் சா.​மு.​நாசர், ஆவடி நகராட்சி தலை​வ​ராக இருந்​து, ஆவடி​யின் வளர்ச்​சிக்கு உழைத்​தவர். அவர் போட்ட அடித்​தளத்​தில்​தான் ஆவடி தொகு​தி​யையே வளரச்ச்சிப் பாதை​யில் கொண்டு சென்​றுள்​ளார்.

கடந்த 5 ஆண்​டில், சா.​மு. நாசர் முயற்​சி​யால், ஆவடி மாநக​ராட்​சி​யில் ரூ.13 கோடி மதிப்​பில் பல்​வேறு சாலைகள், ரூ.31 கோடி மதிப்​பில் மழைநீர் வடி​கால்​வாய்​கள், 19 அரசு துணை சுகா​தார நிலை​யங்​கள், 81 ஆயிரம் பேருக்கு வீட்​டுமனை பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்​பில் சென்​னை அண்​ணாநகர் முதல், நெமிலிச்​சேரி வரை மெட்ரோ ரயில் திட்​டம் விரிவுப்​படுத்​தப்பட உள்​ளது. ஆவடி​யில் புதிய பேருந்து நிலை​யம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது.

கடந்த தேர்​தலில் 55 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற சா.​மு.​நாசரை, இந்த தேர்​தலில் ஒரு லட்​சம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெறச் செய்​ய​வேண்​டும்.

திமுக அரசின் திட்​டங்​களால், இந்​தி​யா​வில் வளரும் மாநிலங்​களில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது. மத்​திய அரசின் நிதி நிலை அறிக்​கை​யில் தமிழகத்​துக்கு என, எந்த திட்​ட​மும் இல்​லை, தமிழ்​நாடு என்ற பெயரே இல்​லை.

தமிழகத்தை முழு​மை​யாக புறக்​கணிக்​கும் மத்​திய பாஜக அரசை, தமிழகம் புறக்​கணிக்​கவேண்​டா​மா? தமிழகத்​தில் எப்​படி​யா​வது நுழைய​வேண்​டும் என பாஜக பார்க்​கிறது.

தமிழகத்​தினுள் நேரடி​யாக நுழைய அதிமுக என்ற போர்​வை​யில் முயற்​சிக்​கிறது பாஜக. ஆகவே, அதி​முக​வுக்கு விழுகிற ஒவ்​வொரு ஓட்​டும் பாஜக​வுக்கு விழுகிற ஓட்டு என்​பதை மக்​கள் மனதில் வைத்​துக்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சா.மு.நாசரை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.</p></div>
கே.கே.நகரில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு: வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in