திமுக இருக்கும் வரை பாஜகவுக்கு இடமில்லை: உதயநிதி ஸ்டாலின் உறுதி

திமுக இருக்கும் வரை பாஜகவுக்கு இடமில்லை: உதயநிதி ஸ்டாலின் உறுதி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் திமுக இருக்​கும் வரை பாஜக​வுக்கு இடமில்லை என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக சார்​பில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், சென்னை சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார்.

இதற்​கான வேட்​புமனுவை அவர் நேற்று முன்​தினம் தாக்​கல் செய்​து​விட்​டு, தனது பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். தொடர்ந்து 2-வது நாளாக நேற்று சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யின் பல்​வேறு பகு​தி​களில் ஆட்​டோ​வில் சென்று வீதி வீதி​யாக உதயநிதி பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அவருக்கு கட்சி நிர்​வாகி​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

இதற்​கிடையே, தொகு​தி​யில் உள்ள சிறு​பான்​மை​யின சமூக அமைப்பு ஏற்​பாடு செய்த கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் வெறுப்பு பிரச்​சா​ரங்​கள் நடந்​தா​லும் தமிழகம் மட்​டும் அமை​திப் பூங்​கா​வாக இருக்​கிறது.

அதற்கு காரணம் முதல்​வர் ஸ்டா​லின். வடமாநிலங்​களில் சிறு​பான்​மை​யினரை அச்​சுறுத்​தும் சூழல் நில​வு​கிறது. அது​போன்ற நிலையை தமிழகத்​தில் கொண்​டுவர பாஜக முயற்​சிக்​கிறது.

திமுக இருக்​கும் வரை இங்கு பாஜக​வுக்கு இடமில்​லை. சிறு​பான்​மை​யினரின் உரிமையை பாது​காப்​ப​தில் முதல்​வர் ஸ்டா​லின் உறு​தி​யாக உள்​ளார். மத்​திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த மசோ​தாவை எதிர்த்து சட்​டப்​பேர​வை​யில் முதல்​முறை​யாக தீர்​மானத்தை திமுக நிறைவேற்​றியது.

அதற்கு வழக்​கும் தொடர்ந்​துள்​ளோம். அந்த மசோ​தாவை கொண்டு வரும்​போது அமித்​ஷாவுடன் பழனி​சாமி கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்தை நடத்​திக் கொண்​டிருந்​தார். எனது பொது வாழ்க்​கை​யில் பலமுறை கைது செய்​யப்​பட்​டுள்​ளேன்.

எனினும், இந்​தி​யக் குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்​துக்கு (சிஏஏ) எதி​ரான போராட்​டத்​தில்​தான் முதலில் கைது செய்​யப்​பட்​டேன். அதை பெரு​மை​யாக சொல்​லிக் கொள்​வேன்.

இப்​போது நாம் மிக முக்​கிய​மான கால​கட்​டத்​தில் இருக்​கிறோம். இது மத நல்​லிணக்​கத்​துக்​கும், பாசிசத்​துக்​கும் நடை​பெறும் தேர்​தல். இத்​தேர்​தலில் பாஜக​வுக்கு நிச்​ச​யம்​ பாடம்​ புகட்​டு​வோம்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

திமுக இருக்கும் வரை பாஜகவுக்கு இடமில்லை: உதயநிதி ஸ்டாலின் உறுதி
தமிழக டிஜிபி மாற்றத்தில் மத்திய அரசின் தலையீடு: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in