கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சி - உதயநிதி விமர்சனம்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சி - உதயநிதி விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: “கர்நாடகாவில் 3 தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவு: கர்நாடகாவில் 3 தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசு சார்பிலோ, முதல்வர் சார்பிலோ கர்நாடக முதல்வரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை. தவெக தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழலில் சென்னையில் இன்று தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின்போது, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழக அரசு கோர வேண்டும்.

இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு வலியுறுத்த வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதல்வரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சி - உதயநிதி விமர்சனம்
அறநிலையத் துறையில் 80 பேருக்கு பணி ஆணை: முதல்வர் விஜய் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in