பள்ளிப்பட்டு அருகே கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 2 பேர் உயிரிழப்பு?

கிராம மக்கள் சாலை மறியல்
பள்ளிப்பட்டு அருகே கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 2 பேர் உயிரிழப்பு?
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கர்லம்பாக்கம் என்ற பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாய்கள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.

இதற்கிடையே, இப் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஏழுமலை (55) என்பவர் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு நேற்றுமுன் தினம் இரவு உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த சுதா (40) என்பவருக்கும் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இறந்தார்.

மேலும், கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற் பட்டோர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பள்ளிப்பட்டு ஆர்.கே.பேட்டை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிப்பட்டு போலீஸார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் தலைமை யிலான மருத்துவ குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

இது குறித்து, வட்டார மருத்துவ அலுவலர் தனஞ் செயன் கூறுகையில், "தண் ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு திருவள்ளூருக்கு அனுப்பியுள்ளோம் மேலும், மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்ததில் 28 பேருக்கு வயிற்று போக்கு இருந்தது தெரிய வந்தது. திருத்தணி அரசு மருத்துவமனையில் 4, பள்ளிப்பட்டில் 9 பேர் என 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிப்பட்டு அருகே கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 2 பேர் உயிரிழப்பு?
ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in