பேசின் பாலம் சிக்னல் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு

ராஜ்குமார்

ராஜ்குமார்

Updated on
1 min read

சென்னை: கட்​டுப்​பாட்டை இழந்​து, தாறு​மாறாக ஓடிய ரேஷன் அரிசி ஏற்​றிச் சென்ற லாரி மோதி இரு​வர் உயி​ரிழந்த சம்​பவம், சென்​னை​யில் அதிர்ச்​சியை ஏற்படுத்தியது.

வெளி​மாநிலங்​களில் இருந்து ரயில் மூலம் சென்​னைக்கு கொண்டு வரப்​படும் ரேஷன் அரிசி மூட்​டைகள், குடோனில் சேமிக்​கப்​பட்டு பின்​னர் லாரி​கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்​கப்​படும்.

அதன்​படி, நேற்று காலை சென்னை பேசின் பாலத்​திலிருந்து மின்ட் நோக்கி செல்​லும் சாலை​யில் உள்ள மூலக்​கொத்​தளம் சந்​திப்பு வழி​யாக, ரேஷன் அரிசி மூட்​டைகளை ஏற்​றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்​டிருந்​தது.

அப்​போது, திடீரென கட்​டுப்​பாட்டை இழந்த லாரி முன்​னால் சென்று கொண்​டிருந்த வாக​னங்​கள் மீது அடுத்​தடுத்து மோதி​யது.

இதில், லாரி​யின் சக்​கரத்​தில் சிக்கி ஆவடி அடுத்த பால​வேடு இந்​திரா நகரை சேர்ந்த கவுதமன், அம்​பத்​தூர் ஜீவரத்​தினம் நகரை சேர்ந்த முரளிதரன் (56) ஆகிய இரு​வர் உடல் நசுங்கி சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

வியாசர்​பாடி கென்​னடி நகரைச் சேர்ந்த பால​கிருஷ்ணன் (63), தாம்​பரத்​தைச் சேர்ந்த ராஜேஸ்​வரி (45) ஆகிய இரு​வர் காயம் அடைந்​தனர். தகவல் அறிந்​து, வண்​ணாரப்​பேட்டை போக்​கு​வரத்து புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்​து, இறந்​தவர்​களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​மவனைக்கு அனுப்பி வைத்​தனர்.

காயம் அடைந்​தவர்​களும் அதே மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். மேலும், இது தொடர்​பாக போக்​கு​வரத்து போலீ​ஸார் வழக்​குப் பதிந்து லாரி ஓட்​டுநர் கோயம்​பேட்​டைச் சேர்ந்த ராஜ்கு​மார் (46) என்​பவரை கைது செய்​தனர். முன்​ன​தாக, அவர் மீது பொது மக்​கள் சரமாரி​யாக தாக்​குதல் நடத்​தினர்​ என்​ப​து குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>ராஜ்குமார்</p></div>
பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் சவுக்கு சங்கர் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in