பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் சவுக்கு சங்கர் மனு

பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் சவுக்கு சங்கர் மனு
Updated on
1 min read

சென்னை: தனது உயிருக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தால், உரிய பாது​காப்பு வழங்க வேண்​டும் என கோரி சவுக்கு மீடியா செயல் அதி​காரி​யான பிரபல யூ டியூப்​பர் சவுக்கு சங்​கர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று புகார் மனு அளித்​தார்.

பின்​னர், இது தொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: லஞ்ச ஒழிப்​புத் துறை இயக்​குந​ராக உள்ள அருண், என்​னைக் கொலை செய்​வ தற்​காக மும்​பை​யில் இருந்து கூலிப்​படையை நியமித்​துள்​ளார்.

எனக்கு டெல்​லி​யில் இருந்து உளவுத் துறை அதி​காரி​கள் தகவல் தெரி​வித்​ததை அடுத்​து, உடனடி​யாக சென்னை காவல் ஆணை​யரை சந்​தித்து புகார் மனு அளித்​துள்​ளேன்.

கடந்த ஆண்டு செப்​டம்​பரிலும் என்னை கொலை செய்​வதற்​காக தென் தமிழகத்​தில் இருந்து ஒரு கூலிப்​படை இதே​போல் ஏவப்​பட்​டது. அப்​போதும் டெல்​லி​யில் இருந்து தகவல் வந்​தது.

அதன் பின்​னர், பொறுப்பு டிஜிபி-​யாக இருந்த வெங்​கட​ராமனை சந்​தித்து புகார் அளித்​தேன். அதன் பிறகே கொலை திட்​டம் கைவிடப்​பட்​டது.

இந்​தி​யா​வில் யாருக்​கும் நடக்​காத கொடுமை​கள் எல்​லாம் எனக்கு நடந்​துள்​ளது. எனவே, எனது உயிருக்கு அச்​சுறுத்​தல் உள்​ள​தால் உரிய பாது​காப்பு அளித்து சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​. இவ்​​வாறு சவுக்கு சங்​கர்​ தெரி​வித்​​தார்​.

பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் சவுக்கு சங்கர் மனு
​திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் ஒப்பந்தம்: ரூ.700 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை - அன்புமணி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in