“தவெகவின் 100 நாள் ஆட்சி ரீல்ஸ் ஆட்சி​” - பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி

Updated on
2 min read

சேலம்: தவெக​வின் 100 நாள் ஆட்சி ரீல்ஸ் ஆட்​சி​யாக, ரீல் ஆட்​சி​யாக இருக்​கிறது என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி குற்​றச்​சாட்டு தெரி​வித்​துள்​ளார்.

சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: கோவை​யில் கல்​லூரி மாணவரை, சக மாணவர்​கள் கொலை செய்​தது மிக​வும் துயர​மானது.

இதுதொடர்​பாக சட்​டப்​ பேர​வை ​யில் கவன ஈர்ப்புத் தீர்​மானம் கொண்டு வந்​துள்​ளோம்.

இந்த விவ​காரத்​தில் அரசு முழு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சரி​யில்​லை. கடந்த 5 ஆண்​டு​களில் இருந்​ததை விட, தற்​போது போதைப்​பொருள் புழக்​கம் அதி​க​மாகி​விட்​டது.

சட்​டம் ஒழுங்கு சீர்​குலை​வுக்கு இதுவே முக்​கிய காரணம். போதைப்​பொருள் நடமாட்​டத்தை இரும்​புக்கரம் கொண்டு அடக்க வேண்​டும்.

தவெக ஆட்​சிக்கு வந்​த​தில் இருந்து பல போராட்​டங்​கள் நடந்​துள்​ளன. விவ​சா​யிகள் பயிர்க்​கடன் தள்​ளு​படிக்​காக போராடி வரு​கின்​றனர். மேகே​தாட்டு பிரச்​சினைக்​காக, அதி​முக போராட்​டம் நடத்​தி​யுள்​ளது.

எந்த ஆட்​சி​யிலும் குறுகிய காலத்​தில் விலை​வாசி உயர்வு ஏற்​பட​வில்​லை. ஆனால், தவெக ஆட்​சி​யின் குறுகிய காலத்​தில் அரிசி விலை கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்ந்​துள்​ளது.

அனைத்து கட்சிக் கூட்டம் தேவை: மேகே​தாட்டு விவ​காரத்​தில், அனைத்​துக் கட்சிக் கூட்​டம், டெல்டா விவ​சா​யிகளின் கூட்​டம் நடத்​தி, சட்ட ரீதி​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும். மேகே​தாட்டு அணை கட்​டப்​பட்​டால் டெல்டா மாவட்​டங்​கள் பாலை​வன​மாகி​விடும்.

சேலம் உட்பட 20 மாவட்​டங்​களுக்கு குடிநீர் கிடைக்​காது. ஆனால் மேகே​தாட்டு விவ​காரத்​தில் தவெக அரசு மெத்​தன​மாக உள்​ளது. அக்​கட்சி ஆட்சி அமைக்க துணை புரிந்​துள்ள கம்​யூனிஸ்ட் கட்​சிகள், விசிக ஆகியவை வலி​யுறுத்​தி​யும் கூட, அனைத்​துக் கட்சிக் கூட்​டம் கூட்​டப்​பட​வில்​லை.

காரணம், காவிரி விவ​காரம் பற்றி அவர்​களுக்கு ஒன்​றும் தெரி​யாது. தமிழகத்​தில் ஏற்​கெ​னவே வறட்சி நில​வு​கிறது. காவிரி​யில் நீர் வேண்​டும் என்று ஜூன் மாதத்​திலேயே கேட்​டிருக்க வேண்​டும். ஆனால், ஆகஸ்ட் மாதத்​தில் தான் தவெக அரசு வழக்கு தொடர்ந்​தது. ஜூனில் 9.15 டிஎம்​சி, ஆகஸ்ட்​டில் 45 டிஎம்சி பெற்​றிருக்க வேண்​டும். காவிரி நீரைப் பெறாத​தால், ஏற்​கெனவே குறுவை சாகுபடி நடக்​க​வில்​லை. இப்​போது சம்​பாவுக்​கும் வாய்ப்​பில்​லை. தவெக​வின் 100 நாள் ஆட்சி ரீல்ஸ் ஆட்​சி​யாக, ரீல் ஆட்​சி​யாக இருக்​கிறது. தேர்​தல் வாக்​குறு​தி​களை தவெக அரசு நிறைவேற்​ற​வில்​லை.

தொழில் முதலீட்டு மாநாடு நடத்​தி​னார்​கள். முதலீட்டுக்கு வரும் நிறு​வனங்​கள், திட்​டம் 1, திட்​டம் 2 என விரி​வாக்​கம் செய்​வார்​கள். அப்​படித்​தான், அதி​முக, திமுக ஆட்​சி​யில் ஏற்​கெனவே இங்கு முதலீடு செய்​துள்ள நிறுவனங்​கள், தற்​போதைய முதலீட்டு மாநாட்​டிலும் விரி​வாக்​கம் செய்​துள்​ளன. ஆனால் இப்போது பெரிய அளவி​லான முதலீடு, புதிய முதலீடு எது​வும் வந்​த​தாகத் தெரிய​வில்​லை என்​றார்.

முன்​ன​தாக, 11 வகையான மது​வுக்கு டாஸ்​மாக்​கில் தடை விதிக்​கப்​பட்​டது குறித்த செய்​தி​யாளர்​களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘எனக்கு மது அருந்​தும் பழக்​கம் கிடை​யாது; எனவே அதைப் பற்றி தெரிய​வில்​லை’ என்​றார். பேட்​டி​யின்​போது, கள்​ளக்​குறிச்சி மாவட்ட அதி​முக செய​லா​ளர் குமரகுரு, முன்​னாள் அமைச்​சர் மோகன், எம்​எல்ஏ. பழனி உள்பட அதி​முக​வினர் பலர் உடனிருந்​தனர்.

<div class="paragraphs"><p>அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி</p></div>
தமிழ்க்கடவுள் முருகன் குறித்து அவதூறாக பதிவிட்ட கோவை இளைஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in