மாவட்டச் செயலாளரை கண்டித்து ஆரணியில் தவெக மகளிர் அணியினர் போராட்டம்

மாவட்டச் செயலாளரை கண்டித்து ஆரணியில் தவெக மகளிர் அணியினர் போராட்டம்
Updated on: 
1 min read

திருவண்ணாமலை: ஆரணி​யில் தவெக மாவட்​டச் செய​லா​ளரைக் கண்​டித்து அக்​கட்​சி​யின் மகளிர் அணி​யினர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

திரு​வண்​ணா​மலை வடக்கு மாவட்ட தவெக செய​லா​ளராக செய்​யாறு பகுதி​யைச் சேர்ந்த சத்யா பதவி வகித்து வரு​கிறார். இவரது கட்சி அலு​வல​கம் ஆரணி​யில் உள்​ளது. மாவட்​டச் செய​லா​ளராக உள்ள சத்யா, கட்​சி​யில் உள்ள பெண் நிர்​வாகி​களிடம் தகாத முறை​யில் நடந்து கொள்​வ​தாகவும், தகாத வார்த்​தைகளால் பேசுவ​தாகவும் நிர்​வாகி​கள் குற்​றம்​சாட்டி வந்​தனர். மேலும், தங்​களிடம் இருந்து பணம் பெற்​றுக்​கொண்டு திருப்​பித்​தர மறுப்​ப​தாகவும் பெண் நிர்​வாகி​கள் புகார் தெரி​வித்து வந்​தனர்.

இந்​தநிலை​யில், ஆரணி​யில் உள்ள தவெக மாவட்​டச் செய​லா​ளர் அலு​வல​கத்தை அக்​கட்​சி​யின் மகளிர் அணி​யினர் மற்​றும் நிர்​வாகி​கள் நேற்று முற்​றுகை​யிட்​டனர். கட்சி அலு​வல​கத்தை பூட்டி போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது, அலு​வல​கத்​துக்கு வெளியே இருந்த பேனரில் இடம் பெற்​றிருந்த மாவட்​டச் செய​லா​ளர் சத்​யாவின் புகைப்​படத்​தில் கருப்பு மை பூசி, மாவட்ட செய​லா​ளரை பதவி நீக்​கம் செய்​யக் கோரியும், அவரை கண்​டித்​தும் முழக்​கமிட்​டனர்.

இது​குறித்து தகவல் அறிந்து வந்த ஆரணி நகர போலீ​ஸார், போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களிடம் பேச்சு​வார்த்தை நடத்தி அவர்​களை சமரசம் செய்து அங்​கிருந்து கலைந்து செல்ல அறி​வுறுத்​தினர். இதையடுத்து அனைவரும் அங்​கிருந்து கலைந்து சென்​றனர். தவெக மாவட்​டச் செய​லா​ளரை கண்​டித்து அக்​கட்​சி​யின் மகளிர் அணி​யினர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டது பொது​மக்​களிடையே சலசலப்பை ஏற்​பத்​தி​யுள்​ளது.

மாவட்டச் செயலாளரை கண்டித்து ஆரணியில் தவெக மகளிர் அணியினர் போராட்டம்
“தொழில் வளத்தை நாசமாக்கியதே 6 மாத கால விஜய் அரசின் சாதனை” - பழனிசாமி சாடல்

X